உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ஜெயம் ரவி படத்தில் ராம்சரண் தேஜா!மோகன்ராஜா இயக்கத்தில், ஜெயம்ரவி நடித்து வெளியான படம், தனி ஒருவன். மிகப் பெரிய வெற்றியடைந்த இப்படத்தின் இந்தி ரீ - மேக்கில் சல்மான் கான் நடிக்கும் நிலையில், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிப்பது, உறுதியாகியுள்ளது. இப்படத்தின், ரீ - மேக் உரிமை, 55 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும், இந்த இரு மொழிகளிலும், தனி ஒருவன் படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகாத நிலையில், தெலுங்கு ரீ - மேக்கை, தமிழில் இயக்கிய மோகான்ராஜாவையே இயக்க வைக்க, பேச்சு வார்த்தை நடக்கிறது. அத்துடன், தெலுங்கு ரீ - மேக்கிலும், தமிழில் நடித்த நயன்தாராவே நாயகியாக நடிக்க இருக்கிறார்.— சினிமா பொன்னையாரேஷ்மி மேனன் புலம்பல்!உறுமீன் படத்தில் நடித்த போது, பாபிசிம்ஹா - ரேஷ்மிமேனன் ஜோடி காதலில் விழுந்து, பின், ரகசியமாக திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின; ஆனால், அதை இருவருமே மறுத்துள்ளனர். மேலும், இதுபற்றி ரேஷ்மி மேனன் கூறுகையில், 'பாபிசிம்ஹாவின் காதல் பற்றி எதுவும் என்னை கேட்காதீர்கள்; அது முடிந்து விட்டது...' என்றதுடன், 'சினிமாவில் எனக்கு பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது; தற்போது, தமிழை அடுத்து தெலுங்கில் இரு படங்களில் நடிக்கிறேன். அதனால், மறுபடியும் காதல், கீதல் என்று செய்தி பரப்பி, கேரியரை கெடுத்து விடாதீர்கள்...' என்கிறார். தென்னை மரத்தில் தேள் கொட்டி, பனை மரத்தில் நெறி கட்டியதாம்!— எலீசாமும்பையில் முகாமிட்ட யுவன் ஷங்கர் ராஜா!தமிழில், மாஸ் படம், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு, 100வது படமாக இருந்தாலும், அப்படமோ, பாடல்களோ வெற்றி பெறவில்லை. இதையடுத்து, யுவனுக்கு பட வாய்ப்புகளும் குறைந்து விட்டது. அதனால், தற்போது, அவரது கவனம், இந்தி பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே, ராஜ் நட்வர்லால் என்ற இந்தி படத்துக்கு இசையமைத்த அவர், அடுத்து, அனுராக் கஷ்யப் என்ற இந்தி இயக்குனரின் புதிய படத்துக்கும் இசையமைக்கயிருப்பதால், மும்பையில் முகாமிட்டுள்ளார்.— சி.பொ.,ரிஸ்க் எடுத்த சமந்தா!இதுநாள் வரை நடித்தோமா, நாலு காசு பார்த்தோமா என்று இருந்து வந்த சமந்தா, முதன்முறையாக, தமிழில் தான் நடித்துள்ள, 24 என்ற படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி வெளியிடுகிறார். இது குறித்து கூறும் போது, 'சினிமாவில் ஏதாவது, 'ரிஸ்க்' எடுக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை; அதனால், நான் நடித்துள்ள படம் மூலமே அதை துவங்கியிருக்கிறேன். அத்துடன், இப்படத்தின் கதை மீது, எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதனால் தான், ஆந்திர உரிமையை, 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன்...' என்றார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!மூனுஷா மற்றும் தாரா நடிகைகளின் பெயர் கொண்ட படத்தில், நாயகியாக நடித்த கயல் நடிகையை, அப்படத்தில் துக்கடா நடிகையாக்கி விட்டார் இயக்குனர். இதனால், படத்தை பார்த்து இயக்குனருடன் மோதிய நடிகை, தற்போது, உஷாராகி விட்டார். அதாவது, தன்னிடம் கதை சொல்ல வருவோரிடம், தனக்கான கதாபாத்திரம் என்ன என்பதை கேட்டறிந்து, அதை அப்படியே படமாக்க வேண்டும் என்கிற ரீதியில், அவர்களிடம், பத்திர பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார். நடிகையின் இந்த அதிரடி கண்டிஷன், இயக்குனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.விஸ்வரூப நடிகரை வைத்து படம் தயாரித்து நஷ்டப்பட்டுப்போன சண்டக்கோழி பட இயக்குனரிடம், 'மீண்டும் தான் ஒரு படத்தில் நடித்து கொடுத்து, உங்களது நஷ்டத்தை சரி கட்டி விடுகிறேன்...' என்று, கூறியுள்ளார் விஸ்வரூப நடிகர். ஆனால், உஷாரான, சண்டக்கோழி இயக்குனர், 'ஏற்கனவே, பட்ட நஷ்டம் போதும்; உங்களை வைத்து இன்னொரு படம் தயாரித்து, நான் அதளபாதாளத்தில் விழ வேண்டாம்...' என்று நழுவிக் கொண்டுள்ளார்.சினி துளிகள்!* தான் தமிழில் நடித்த படங்கள் எல்லாமே தோல்வியடைந்து வருவதால், தெலுங்கில், புதிய படங்களுக்கான முயற்சியில் இறங்கியுள்ளார் கயல் ஆனந்தி.* தன் புதிய படத்திற்காக, விஷால் உள்ளிட்ட சில நடிகர்களிடம், கால்ஷீட் கேட்டு வருகிறார் இயக்குனர் லிங்குசாமி.* ஜெய் நடித்த, தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படம், தமிழில் வெளியாகாமல், முதலில் தெலுங்கில் வெளியாகிறது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !