உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்கள்!இதுவரை, தமிழ் நடிகர்கள் தான், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் வரை, ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது, ஆந்திர நடிகர்களுக்கும் தமிழில் கோலோச்ச ஆசை எற்பட்டுள்ளதால், பாகுபலி பட நாயகன் பிரபாஸ், செல்வந்தன் நாயகன் மகேஷ்பாபு மற்றும் புருஸ்லீ படத்தில் நடித்த ராம்சரண் போன்றோர், இனிமேல், தாங்கள் நடிக்கும் படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில், ஒரே நேரத்தில் வெளியிட தயாராகியுள்ளனர். அதனால், இரு மொழி ரசிகர்களுக்கும், நன்கு பரிச்சயமான ஸ்ருதிஹாசன், சமந்தா மற்றும் அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.— சினிமா பொன்னையாராதிகா பிரசித்தா வேடத்தில், ஸ்ரத்தா கபூர்!ஜெயம் ரவி நடித்த, தனி ஒருவன் படம், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீ மேக் ஆகி வருவதை தொடர்ந்து, குற்றம் கடிதல் படமும் இந்தியில் ரீ மேக் ஆகிறது. தேசிய விருது பெற்ற இப்படத்தைப் பார்த்த இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர், அப்படத்தில், ராதிகா பிரசித்தா நடித்த டீச்சர் வேடத்தில், தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். இவர் மராட்டிய மொழியிலும் பிரபலமான நடிகை என்பதால், தற்போது, குற்றம் கடிதல் படம், இந்தி மற்றும் மராட்டி என, இரு மொழிகளிலும் ரீ மேக் ஆகிறது.— சி.பொ.,இறங்கி வந்த டாப்சி!நடிகை டாப்சி, தமிழில் பல படங்களில் நடித்த போதும், அவருக்கு திருப்புமுனை கிடைக்கவில்லை. அதனால், ஆரம்பம், வை ராஜா வை மற்றும் காஞ்சனா 2 உள்ளிட்ட சில படங்களில், கேரக்டர் நடிகையாக நடித்தவர், தற்போது, யாருடா மகேஷ் பட நாயகன் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தில், அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். வளர்ந்து வரும் நடிகரின் படம் என்ற போதும், சிம்புவுடன் தான் நடித்து வந்த, கான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், வேறு படமே இல்லாம, இந்த பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!— எலீசாவிக்ரமுக்கு கிடைத்த அதிர்ச்சி தோல்வி!ஐ மற்றும் பத்து எண்றதுக்குள்ள படங்களின் தோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ளார் விக்ரம். பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடிக்கும் போது, ஏழு கோடி ரூபாயில் இருந்த தன் சம்பளத்தை, 10 கோடி ரூபாய்க்கு உயர்த்திட நினைத்திருந்தார். அதனால், தன்னை ஒப்பந்தம் செய்ய வந்த கம்பெனிகளிடம், 'பத்து எண்றதுக்குள்ள படம் வெளியான பிறகே, சம்பளம் பற்றி பேசுவேன்...' என்று கூறியிருந்தார். தற்போது அப்படம் தோல்வியடைந்து விட்டதால், அவரை புதிய படங்களுக்கு, ஒப்பந்தம் செய்ய ஆளில்லை. அதனால், 10 கோடிக்கு மேல் போக இருந்தவர், 5 கோடியே போதும் என்ற அளவுக்கு இறங்கியுள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!ஆங்கிலோ இந்தியன் நடிகையுடன் நெருக்கம் காட்டி வந்த கொலவெறி இசையமைப்பாளர், தற்போது, தான் நடித்து வரும் படங்களின் கதாநாயகிகளுடன், நட்பு வளர்த்து வருகிறார். ஆனால், மேற்படியார், உதட்டு முத்தம் கொடுத்து, அதை கேமராவில் பதிவு செய்து, உலகத்துக்கு அம்பலப்படுத்தி விடக்கூடிய விவகாரமான ஆள் என்பதால், அவர், வீக் என்ட் பார்ட்டிகளுக்கு அழைத்தால், நடிகைகள் பிடிகொடுக்காமல், 'எஸ்கேப்' ஆகி விடுகின்றனர்.பிரியாணி நடிகர் நடிக்கிற படங்கள், தொடர்ந்து, 'ப்ளாப்' ஆகி வருவதால், அடுத்து, அவருக்கு, ஒரு, 'ஹிட்' தேவைப்படுகிறது. அதனால், தொடர்ந்து, 'ஹிட்' கொடுத்து வரும், தன் அபிமானத்திற்குரிய தாரா நடிகையை, தன் புதிய படத்தில் நடிக்க, கேட்டு வருகிறார். ஆனால், தற்போது இயக்குனர் ஒருவரின் அரவணைப்பில் இருக்கும் நடிகை, பிரியாணியின் வேண்டுகோளை அலட்சியப்படுத்தி வருகிறார். இதனால், நடிகையைப் பற்றி, தவறான வதந்திகளை, நட்பு வட்டாரங்களில் பரப்பி வருகிறார் நடிகர்.அகர்வால் நடிகையின் மார்க்கெட், மறுபடியும் இறங்கு முகத்தில் இருப்பதால், இதுவரை, 'மேல்தட்டு கதாநாயகர்களுடன் மட்டும் தான் நடிப்பேன்...' என்று, 'பில்டப்' கொடுத்து வந்த நடிகை, தற்போது, சில இளவட்ட நடிகர்களுடன், நடிப்பதற்கு கதை கேட்டுள்ளார். அத்துடன், அப்படத்தை இயக்கும் புதுமுக இயக்குனர்களையும் புன்னகை வீசி, வசப்படுத்தி வருகிறார். சினி துளிகள்!* நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணி ஜெயிப்பதற்கு, திரைக்குப் பின்னால் இருந்து நிறைய, 'கேன்வாஸ்' செய்திருக்கிறார் ஆர்யா.* விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இசையமைத்த அனிருத், அடுத்து, ரஜினி படத்துக்கு இசையமைக்க, முயற்சி எடுத்து வருகிறார்.* விஜய்யின், 60வது படத்தில், எப்படியேனும் தன்னை இணைத்து விட வேண்டும் என்று, தீவிரம் காட்டி வருகிறார் காஜல் அகர்வால்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !