இதப்படிங்க முதல்ல...
காலா படத்தில், சென்டிமென்ட் ரஜினி!கபாலி படத்தைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம், காலா. இப்படமும், கபாலியைப் போலவே, கேங்ஸ்டர் கதையில் உருவானாலும், இப்படத்தில், ரஜினிக்கு, மகன், மருமகள், பேரன், பேத்தி என்று கதைக்களம் அமைந்துள்ளதால், ரஜினிக்கு சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக உள்ளது. அவ்வகையில், 'காலா படத்தில், ரஜினியை ஆக் ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதாபாத்திரத்தில் பார்க்கலாம்...' என்கின்றனர்.— சி.பொ.,'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!இந்தி நடிகை, ப்ரியங்கா சோப்ரா, குவாண்டிகா என்ற ஆங்கிலத் தொடரில் நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, மதராசப்பட்டினம், ஐ மற்றும் 2.0 படங்களில் நடித்துள்ள நடிகை எமி ஜாக்சனும், சூப்பர் கேர்ள் என்ற, அமெரிக்க, 'டிவி' தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடரின் மூன்றாவது சீசனில், சாட்டர்ன் கேர்ள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எமிஜாக்சன். தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை!— எலீசாகோடம்பாக்கத்தில் முகாமிட்ட இந்தி நடிகை சாயிஷா!ஜெயம்ரவி நடித்த, வனமகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், சாயிஷா சாய்கல். இந்தி நடிகையான இவர், அதையடுத்து, பிரபுதேவா இயக்கத்தில், விஷால் - கார்த்தி நடிக்கயிருந்த, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், அந்த படம் துவங்க தாமதமானதால், தற்போது, கோகுல் இயக்கத்தில், விஜயசேதுபதி நடிக்கும், ஜூங்கா என்ற படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். இதையடுத்து, கோடம்பாக்கத்தில் முகாமிட்டு, புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இடம் கண்டால் மடத்தை பிடிக்கலாம்!— எலீசாமசாலா கதைகளில் விஜயசேதுபதி!யதார்த்தமான கதை கருக்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தும், விஜயசேதுபதியும், தற்போது, மசாலாப் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், 'தொடர்ந்து யதார்த்தமான கதைகளில் நடித்தால் ரசிகர்களுக்கு போர் அடித்து விடும்; அதனால், ஒரு மாறுதலுக்காக, சண்டை காட்சிகளில், பத்து பேரை அடித்து தூக்கும் நாயகனாகவும், அவ்வப்போது நடிக்க ஆசைப்படுகிறேன்...' என்கிறார்.— சி.பொ.,கறுப்பு பூனை!* தன் உடற்கட்டு பெருத்து போனதால் தான், மார்க்கெட் அவுட்டாகி விட்டதாக நினைத்த சின்ன குஷ்பு நடிகை, உடம்பை மெலிய வைத்து, வாய்ப்புக் கேட்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால், இதுவரை, 'நான் நேர்வழியில் தான் சான்ஸ் கேட்பேன்...' என்று, 'பில்டப்' கொடுத்து வந்த நடிகை, தற்போது, குறுக்குசாலில் பயணிக்கத் துவங்கியுள்ளார்.* சமீப காலமாக, அரசியல் கருத்துகளை சொல்லி வரும் உலகநாயகனுக்கு, ஒரு அதிரடியான அரசியல் படத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த பிரமாண்ட இயக்குனரை அழைத்து, ஏற்கனவே தான் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், 'அந்த படம், இன்றைய அரசியல் சீர்கேடுகளை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இருக்க வேண்டும்...' என்றும் கூறியுள்ளார்.சினி துளிகள்!* குலேபகாவலி படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துள்ளார், ஹன்சிகா.* கமல்ஹாசனுக்கு சில கட்சிகள் அழைப்பு விடுத்தும், 'தனிக்கட்சி கொள்கையே தனக்கு சரிப்பட்டு வரும்...' என்று கூறி வருகிறார்.* கவுதம் மேனனின், துருவநட்சத்திரம் படத்தில், ரீத்துவர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகியாக நடிக்கின்றனர்.* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா வில்லனாக நடித்துள்ள, மெர்குரி படம், 30 ஆண்டுகளுக்கு முன், கமல் நடித்த, பேசும்படம் பாணியில், வசனமே இல்லாமல் உருவாகி வருகிறது.* நியூட்டன் என்ற இந்தி படம், 2018ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவ்ளோதான்