இதப்படிங்க முதல்ல...
பின்லாடன் கதை சினிமாவாகிறது!ஈராக்கில், அமெரிக்கா நடத்திய போரை மையமாக வைத்து, தி ஹார்ட் லாக்கர் என்ற படத்தை இயக்கிய கேத்ரின் பிக்லோ, மார்க்போல் என்ற அமெரிக்கர்கள், இப்போது மறைந்த பின்லாடனின் கதையை, கில் பின்லாடன் என்ற பெயரில் படமாக்குகின்றனர். இப்படத்தில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை, அல்-குவைதா தாக்கியது முதல், பின்லாடனை அமெரிக்கப் படை அழித்தது வரையிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.— சினிமா பொன்னையா.வில்லியாக மாறும் சதா!'பி.வாசு இயக்கத்தில் நான் நடித்துள்ள புலிவேசம் படம், மீண்டும் தமிழில் எனக்கொரு என்ட்ரியை கொடுக்கும்...' என்கிறார் சதா. மேலும், இனி ஹீரோயின் வேடத்துக்காக காத்திருக்காமல், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக உருவெடுக்கப் போவதாக சொல்லும் சதா, அதிரடியான வில்லி வேடம் கிடைத்தாலும் நடிக்க விரும்புவதாக கூறுகிறார். புலி பசித்தால் புல்லையும் தின்னும்!— எலீசா.லிங்குசாமி படங்களை வாங்கிய, யு.டிவி!ராவணன் படத்தை தயாரித்த, 'யு.டிவி' நிறுவனம், அடுத்து, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும், வேட்டை, வழக்கு எண்.18/9, கும்கி ஆகிய மூன்று படங்களையும் வாங்கி வெளியிடுகிறது. இந்நிறுவனம், புதிய படங்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யும் என்பதால், மேலும், சில நிறுவனங்களும் தங்கள் படங்களை வெளியிட, 'யு.டிவி'யை அணுகி வருகின்றன.— சி.பொ.,மணிரத்னம் இயக்கும் காதல் படம்!விஜய், ஆர்யா, மகேஷ் பாபு ஆகியோரை வைத்து, பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்க திட்டமிட்ட மணிரத்னம், பட்ஜெட் காரணமாக அம்முயற்சியை கைவிட்டிருப் பதாக சொல்கிறார். அதற்கு பதிலாக, காஸ்மோபாலிடன் சிட்டி காதல் என்றொரு படத்தை இயக்கப் போவதாக சொல்லும் மணிரத்னம், அப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன், கவுதமை அறிமுகம் செய்கிறார்.— சி.பொ.,பிசியான டாப்ஸி!தமிழ் சினிமா கை கொடுக்காததால், தெலுங்குக்கு சென்ற டாப்ஸிக்கு கோபிசந்த், சுனில் ஆகிய ஹீரோக்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. அதோடு, சித்தார்த்துக்கு ஜோடியாகவும் இந்தி படமொன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதால், பிசியாகி விட்டார் டாப்ஸி. இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக் கோதாவில் இறங்கி நிற்பதால், தெலுங்கு சினிமாவில் டாப்ஸியின் மார்க்கெட் எகிற இருக்கிறது. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டு பானையிலும் தனம் இருக்கும்.— எலீசா.மீண்டும் பிசியான கோவை சரளா!முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான கோவை சரளா, இதுவரை, எழுநூறு படங்களில் நடித்துள்ளார். ஆனால், இடையில் சில காமெடி நடிகர்கள் ஆதரவு தராததால், படம் இல்லாமலிருந்த சரளா, இப்போது, காஞ்சனா படத்திற்குப் பிறகு, மீண்டும் பிசியாகி விட்டார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலிருந்தும் படங்கள் வரத் துவங்கியிருப்பதாக சொல்பவர், தன்னை மீண்டும் கொண்டு வந்த ராகவா லாரன்சுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முந்தினோர் பிந்தினோர் ஆவார்; பிந்தினோர் முந்தினோர் ஆவார்!— எலீசா.நமீதாவுக்கு சோனா ரிப்பீட்டு!சமீபத்தில் தான், 'என்னை வைத்து பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா...' என்று, அவருக்கு எதிராக அறிக்கை விட்டார் நமீதா. ஆனால், இப்போது சோனாவோ, 'நான் நமீதாவுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியது எத்தனையோ மாதங்களுக்கு முன் நடந்தது. ஆனால், இப்போது அவருக்கு சுத்தமாக தமிழில் படமே இல்லாததால், பப்ளிசிட்டிக்காக என் பெயரை இழுத்து, விளம்பரம் செய்து கொள்கிறார்...' என்று நமீதா விட்ட ஏவுகணையை, அவருக்கே திருப்பி விடுகிறார் சோனா. உனக்காச்சு, எனக்காச்சு; பார்க்கிறேன் ஒரு கை!— எலீசா.நடிகர்களின் சம்பளம் குறைப்பு!தியேட்டர்களில் டிக்கெட் விலை தடாலடியாக உயர்ந்ததற்கு, நடிகர்களின் சம்பளம் கோடிக் கணக்கில் உயர்ந்ததே காரணம் என்று, சமீபத்தில் நடந்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர்களின் சம்பளத்தை அவர்கள் நடிக்கும் படங்களின் வசூலைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, தியேட்டர்களில் நுழைவு கட்டணத்தையும் குறைத்து, ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள அவர்கள், இது சம்பந்தமாக அரசுக்கும் கோரிக்கை வைக்க உள்ளனர்.— சினிமா பொன்னையா.அவ்ளோதான்!