புல்லட் ஓட்டிய முதல் பெண்மணி!
கடந்த, 1930களில், மோட்டார் பைக் அபூர்வமாக காணக்கூடிய வாகனமாக இருந்தது. அன்று, வெள்ளையர்கள் சிலர், பைக் வைத்திருந்தனர். ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும்படி, 'இங்கிலாந்து ராயல் என்பீல்டு பைக்'கை ஓட்டினார், கே.ஆர்.நாராயணி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவரின் மனைவியான இவர், கேரள மாநிலம், ஆலப்புழா நகரில் பைக் ஓட்டியது, பலரை ஆச்சரியப்பட வைத்தது. பொது இடங்களில் வருவதற்கே பெண்கள் தயங்கியபோது, இவர் பைக் ஓட்டி இருக்கிறார். கேரளாவின் முதல் பெண் அமைச்சர் என்று போற்றப்படுபவரும், பழம்பெரும் கம்யூ., தலைவியாக இருந்தவருமான கே.ஆர்.கவுரியின், அக்கா தான் இந்த, நாராயணி. — ஜோல்னாபையன்.