கவிச்சோலை - மாற்றம்
* சொற்ப இரண்டு நாட்களில்நாளை என்பது கூடநேற்றாகி விடுகிறது!* பருவச் சுழற்சியில்மகளாயிருந்தவள்தாயாகவும் ஆகிறாள்!* காலச் சுழற்சியில்அமாவாசை கூடபவுர்ணமி ஆகிறது!* இயற்கைச் சுழற்சியில்அருவிகள் தான்நதிகளாகின்றன!* கடற்பரப்பில்மழைத்துளிகள் கூடமுத்துக்களாகின்றன!* அடைபட்டுப்போனகூட்டுப்புழு கூடவண்ணத்துப் பூச்சியாகிறது!* விதை மரமாகவும்,மரம் விதையாகவும்மாறித்தானே ஆகும்!* வசந்தம் என்பதும்வாழ்க்கைப் பரப்பில்வராமலா போகும்!— இளசை சுந்தரம், மதுரை.