உள்ளூர் செய்திகள்

மனித முகமூடி அணிந்த ஆடுகள்!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் பல, சுற்றுலா பயணியருக்கு பிரியமான இடங்களாக உள்ளன. மேகாலயாவில் நார்த்தியாங் என்ற இடத்தில், துர்கா கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு, திருவிழா காலங்களில், ஆடுகளை பலி கொடுப்பது வழக்கம். அப்போது, மனிதனின் முகம் வரைந்த முகமூடிகளை, ஆட்டின் முகத்தில் கட்டி விடுவர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், இங்கு மனிதர்களை பலியிட்டு வந்தனராம். பலி இடப்படுபவர் சடலம், ஓடை வழியாக மைதாங் நதியில் சேருமாம். ஆங்கிலேயர்கள், மனித பலி கூடாது என்று சட்டம் போட்ட பிறகே, மனிதனுக்கு பதிலாக ஆடுகளை பலியிட துவங்கினர். அதை நினைவு படுத்தத்தான், ஆடுகளுக்கு மனித முகமூடி கட்டுகின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !