உள்ளூர் செய்திகள்

கிராமபோன் சேகரிப்பாளர்!

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த, சன்னி மாத்து என்பவர், 40 ஆண்டுகளுக்கு முன், மதுரைக்கு வந்துள்ளார். மதுரை வீதியில் இருந்த காயலான் கடையில், பழைய கிராமபோனை கண்டு, அதை வாங்கி தன் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்பின், பல பழம்பொருட்கள் சேகரிக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. இன்று, அவரிடம் மிகவும் பழமையான கிராமபோன்கள் பல உள்ளன. 1908ல் பயன்படுத்திய கிராமபோன் ஒன்று, இன்று வரை நல்ல நிலையில் இயங்கி வருகிறது. பழைய பொக்கிஷங்களை வைக்க, வீட்டில் இடம் இல்லாத நிலையில், தனக்கு சொந்தமான, 3,500 சதுர அடியில் கட்டடம் கட்டி, இவைகளை பாதுகாத்து வருகிறார். இந்த அரிய பொருட்களை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !