உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

* இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் வைக்கும் பெட்டியில் சாக்பீஸ் பொடியை துாவி விட்டால், துரு பிடிக்காமல் இருக்கும்* ஆணியை இடுக்கியால் பிடித்து அடித்தால், விரல்கள் நசுக்கிக் கொள்வதை தடுக்கலாம் * மெழுகுவர்த்தியை லேசாக சூடாக்கி ஜிகினாத் துாளில் புரட்டி எடுக்கவும். இந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால், பளபளவென்று அழகாக ஜொலிக்கும்* பூட்டில், சாவி ஓட்டைக்குள் எண்ணெயை ஊற்றாமல், சாவியை எண்ணெயில் முக்கி பூட்டை சிலமுறை திறந்து பூட்டலாம்* அங்கங்கே சோற்றுக் கற்றாழை செடியை கட்டி விட்டால் அல்லது சிறு சட்டிகளில் வைத்தால், கொசுக்களின் தொல்லை நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !