குறமகா தற்காப்பு கலை!
இன்று பாலஸ்தீன நாடு மீது, குண்டு மழை பொழிந்து வருகிறது, இஸ்ரேல்.இஸ்ரேல் ராணுவம் சக்தி வாய்ந்த படை; இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது, மொசாத் என்ற அமைப்பாகும்.'குறமகா' என்ற தற்காப்பு வித்தைகளை, ராணுவ வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர், பயிற்சியாளர்கள். கராத்தே உடன் குங்பூ வித்தையும் கலந்து உருவாக்கப்பட்டது தான், குறமகா. கேரள மாநிலம், கொச்சியில், குறமகா வித்தையை கற்றுக் கொடுக்கும் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் தான்.'வன்முறைக்கு ஆளாகும் போது, எங்களை காப்பாற்றிக் கொள்ள, இந்த பயிற்சி பெரிதும் உதவுகிறது...' என்கின்றனர், பெண்கள்.— ஜோல்னாபையன்