எலுமிச்சை அழகி!
'ஆசிய பெண்கள், இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை பெற்று விடுவர்' என்ற விமர்சனம், மேற்கத்திய நாடுகளில் உண்டு. இந்த விமர்சனங்களை அடித்து, சுக்கு நூறாக்கியுள்ளார், கிழக்கு ஆசியாவின் தைவான் நாட்டைச் சேர்ந்த, ஜாங் டிங்ஜுவான் என்ற, 41 வயது பெண். இவருக்கு, 14 மற்றும் 10 வயதுகளில் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.ஆனால், படத்தைப் பாருங்கள்... தன் மகனுடன் அமர்ந்திருக்கும் இவர், அந்த சிறுவனுக்கு தங்கை போல் தோற்றமளிக்கிறார்.தற்போது, சமூக வலைதளங்களில், இப்பெண்ணின் புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன. தன் இளமை குறித்து, 'தினமும், உடல் முழுவதும் எலுமிச்சை சாற்றை தேய்க்கிறேன். அதில், சருமத்துக்கு புத்துயிர் அளிக்கும் விஷயங்கள் உள்ளன. இதுதான் என் இளமையின் ரகசியம்...' என்கிறார், ஜாங் டிங்ஜுவான்.— ஜோல்னா பையன்.