இதப்படிங்க முதல்ல..
சந்திரபாபுவாக, தனுஷ்!தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என, பன்முக திறமை கொண்ட நடிகராக வலம் வந்தவர், மறைந்த நடிகர், சந்திரபாபு. அவர் எழுதி, பாடி நடித்த, 'குங்குமப்பூவே கொஞ்சு புறாவே... நான் ஒரு முட்டாளுங்க... பிறக்கும் போதும் அழுகின்றான்...' என்ற பல பாடல்கள், மிகவும் பிரபலம்.சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு கதையில், தற்போது ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில், சந்திரபாபு வேடத்தில், தனுஷை நடிக்க வைக்கவும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. தற்போது, தனுஷ், ஹாலிவுட் படங்களிலும் நடிப்பதால், இந்த படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கவும் முடிவெடுத்துள்ளனர். அதனால், 'இந்த படத்தில் நடிப்பதற்கு முன், சந்திரபாபுவின் நடனம், நடிப்பை உள்வாங்கி என்னை முழுமையாக தயார்படுத்தி, களத்தில் இறங்கப் போகிறேன்...' என்கிறார், தனுஷ்.— சினிமா பொன்னையாவாணி போஜன் அடுத்த திட்டம்!சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுடன் நடித்து வந்த வாணி போஜன், மகான் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படத்தின் நீளம் காரணமாக, அவர் நடித்த பெருவாரியான காட்சிகளை கத்தரித்து, அவரை, 'டம்மி' பண்ணி விட்டனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார், வாணி போஜன்.'பெரும்பாலும் முன்வரிசை நடிகர்களின் படங்களில், படத்தின் நீளம் அதிகமானால், 'ஹீரோயினி' காட்சிகளில் தான் கை வைப்பர் என்பதை, சில அனுபவசாலி நடிகையர் சொல்லியுள்ளனர். இந்த நெருக்கடியிலிருந்து விடுபட, இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.'அதாவது, முன்னணி, 'ஹீரோ'களுடன் நடிக்கும் ஆசையை தற்காலிகமாக ஓரங்கட்டி வைத்து, என் திறமையை வெளிப்படுத்தி, இரண்டாம் தட்டு, 'ஹீரோ'களுடன், 'வெயிட்'டான வேடங்களில் நடித்து, முதல் தர நடிகை என்ற இடத்திற்கு வரப்போகிறேன். அதன்பின் மேல்தட்டு, 'ஹீரோ'களுடன் நடிப்பேன்...' என்கிறார்.— எலீசாஅமலா பால் புது முயற்சி!இயக்குனர் ஏ.எல்.விஜயை விவாகரத்து செய்த பிறகு, சினிமாவில் பெரிய ரவுண்டு வரலாம் என்று திட்டமிட்ட, அமலா பால், ஆடை என்ற படத்தில், நிர்வாணமாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், சினிமா துறையில், யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை.அதையடுத்து ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த அமலாபாலுக்கு, தற்போது, மார்க்கெட் அவுட் ஆகிவிட்டது. இதன் காரணமாக, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வரும் அமலாபால், அடுத்தபடியாக, விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க முயற்சி எடுத்து வருகிறார்.'பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகையருக்கு, சினிமாவில், 'ரீ- - என்ட்ரி' கிடைத்து வருவதால், இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளேன்...' என்கிறார், அமலாபால்.— எலீசாவிஜய் சேதுபதி போட்ட, 'கண்டிஷன்!'தற்போது, விஜய் சேதுபதி, 'ஹீரோ'வாக நடிக்கும் படங்களை விட, வில்லனாக நடிக்கும் படங்களே சக்கை போடு போட்டு வருகின்றன. அதன் காரணமாக, 'ஹீரோ'வாக நடிக்க, 10 கோடி ரூபாய் கொடுப்பதற்கே தயங்கும் தயாரிப்பாளர்கள், வில்லனாக நடிக்க, 15 கோடி கொடுக்கின்றனர். இந்த நேரத்தில், ஷாருக்கானின், ஜவான் ஹிந்தி படத்தில், வில்லனாக நடிக்க அழைப்பு வந்தபோது, தடாலடியாக, 30 கோடி கேட்டுள்ளார், விஜய் சேதுபதி. இதைக்கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.இருப்பினும், விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, அனைத்து மொழிகளிலும், 'சூப்பர் ஹிட்' ஆகி வருகிறது. அவர் இப்படத்தில் நடித்தால், அனைத்து மொழிகளிலும் படத்தை ஓட வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்தை கொடுத்து, ஒப்பந்தம் செய்துள்ளார். — சினிமா பொன்னையாசினி துளிகள்!* ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் போன்ற நடிகையர், திரைப்படங்களில் பின்னணி பாடி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷுக்கும் பின்னணி பாடும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக தான் நடித்த படங்களில் இடம்பெற்ற, 'ஹிட்' பாடல்களை பாடி, அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறார்.* அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் என, பல படங்களை இயக்கிய, தங்கர்பச்சான் தற்போது, இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம்மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பில், கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கப் போகிறார்.அவ்ளோதான்!