படவிழாவில் தாராளம்; மிஸ் யுனிவர்ஸ் அதிரடி!
பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சனும், 'டைட்டானிக்' புகழ் லியானார்டோ டிகாப்ரியோவும் 'தி கிரேட் காட்ஸ்பி' என்ற, ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் நியூயார்க்கில் நடந்தது. இந்த விழாவுக்கு, கடந்தாண்டின், மிஸ் யுனிவர்சாக மகுடம் சூடிய, அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா கால்போ, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.கறுப்பு நிற உடை அணிந்து, ஒய்யார நடை போட்டு, விழாவுக்கு வந்த ஒலிவியாவை, கேமராக்கள் சூழ்ந்து கொண்டன. காரணம், ஒலிவியா, மேல் உள்ளாடை இன்றி விழாவுக்கு வந்திருந்தார். இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி, விழாவுக்கு வந்திருந்த பல பிரபலங்களின் பார்வையும், ஒலிவியா மீதே இருந்தன. ஆனால், இவ்வளவு பரபரப்பு நிலவியபோதும், 'இந்த பூனையும் பால் குடிக்குமா' என்பதைப் போல், எதுவுமே நடக்காதது போல், மிக அமைதியாக வந்து விழா முடிந்ததும், அலட்சியமாக திரும்பி சென்றார் ஒலிவியா.— ஜோல்னா பையன்.