உள்ளூர் செய்திகள்

குரங்கு வித்தைக்காரர்கள்!

மனிதன் எங்கு வாழ்ந்தாலும், மூட நம்பிக்கை, அவனை விட்டு வைப்பது இல்லை. நம்மூரில், 'நல்ல காலம் பொறக்குது...' என்று, குரல் கொடுக்கும் குடுகுடுப்பைக்காரன் போல், சுற்றுலாப் பயணியரிடம் குரங்கை காட்டி, பணம் சம்பாதிக்கும் சிலர், வட ஆப்ரிக்க நாடான மொரோக்கோவிலும் இருக்கின்றனர்.மொரோக்கோ நகருக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருவதுண்டு. இங்கு, சிலர் குரங்குகளை வைத்து, வித்தை காட்டி, பணம் பெறுகின்றனர். இதற்கு, புது யுக்தியை கையாள்கின்றனர்.இவர்கள், தங்களிடம் உள்ள குரங்குகளை சுற்றுலா பயணியர் மீது ஏவி விடுவர். அந்த குரங்குகள் சுற்றுலா பயணியர் மீது அமர்ந்து, சத்தம் எழுப்பினால், நல்ல சகுனம் என்று கூறுவர். அதை நம்பி, அவர்கள் பணம் கொடுத்ததும், குரங்காட்டி குரல் கொடுப்பார். அதை கேட்டதும் தான், குரங்குகள் தோளிலிருந்து இறங்கும். விஷயம் தெரிந்த பலர், குரங்கு வித்தைக்காரர்களைக் கண்டாலே தப்பி ஓடுவதையும் காணலாம்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !