உள்ளூர் செய்திகள்

நவராத்திரி துளிகள்!

நவராத்திரி பூஜை பலன்கள்: நவராத்திரியின்போது, வீட்டிற்கு வருவோரை உபசரிக்கும் பெண்களுக்கு, மாங்கல்ய பலம் கூடுவதுடன், மனதில் அஞ்ஞான இருள் அகன்று, மெய்ஞான ஒளி பிறக்கும். நட்பு, விருந்தோம்பல், கூட்டுறவு, பக்தி, குடும்ப ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வெளிப்படும்.வெற்றித் திருநாள் விஜயதசமி: சரஸ்வதி பூஜைக்கு, மறுநாள் கொண்டாடப்படும் விழா விஜயதசமி. பராசக்தி, பண்டாசுரனுடன், ஒன்பது நாட்கள் போரிட்டாள். பத்தாம் நாள் அவனை வதம் செய்தாள். இந்த வெற்றி திருநாளே விஜயதசமி. அந்நாளில்தான், சக்தி, சிவனுடன் ஐக்கியமானாள். இந்நாளில் துவங்கப்படும் நற்காரியங்கள் வெற்றி பெறும். முற்காலத்தில் அரசர்கள் விஜயதசமியன்று சிம்மாசனம், வெண்கொற்றக்குடை, படைக்கலன்கள் ஆகியவற்றிற்கு பூஜை நடத்தினர்.சரஸ்வதியின் வேறு பெயர்கள்: பாரதி, சாரதாதேவி, ஹம்சவாகினி, ஜகநீ, வாணீஸ்வரி, கவுமாரி, பிரம்மசாரிணி, புத்திதாத்ரி, வரதாயினி, க் ஷக்ரஹண்டி மற்றும் புவனேஸ்வரி போன்றவை சரஸ்வதிக்குரிய திருநாமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !