உள்ளூர் செய்திகள்

இப்படியும் ஒரு கடைசி ஆசை!

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரபலமான அரசியல்வாதி, டெஸ்கெடே பஸ்டன் பிட்சோ. 'ஐக்கிய ஜனநாயக' கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.இவர், 1999ல் வாங்கிய, 'மெர்சிடிஸ்' காரை, தன் உயிருக்கு மேலாக நேசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த கார், அவரது வீட்டு வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை வெளியில் எடுத்துச் செல்வது இல்லை, பிட்சோ. அவ்வப்போது காரில் ஏறி அமர்ந்து, அதில் உள்ள ரேடியோவை இயக்கி, பழைய பாடல்களை கேட்பார்.'நான் இறந்ததும், அந்த காரில் என்னை அமர வைத்து, காருடன் சேர்த்து புதைத்து விடுங்கள்...' என, தன் குடும்பத்தினரிடம் கூறி வந்தார். இந்நிலையில், சமீபத்தில், அவர் காலமானார். இதையடுத்து, டிரைவர் சீட்டில், பிட்சோவின் உடலை அமர வைத்து, மிகப்பெரிய பள்ளம் தோண்டி, காருடன் சேர்த்து புதைத்து, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றினர், குடும்பத்தினர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !