உள்ளூர் செய்திகள்

மயில் அறைகள்!

இத்தாலியில் டஸ்கேன் என்ற இடத்தில், 'சமிசேனோ கேசல் வீடுகள்' என குறிப்பிடப்படும் அரண்மனை உள்ளது. அன்றைய அரசனால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின், அறைகள் அனைத்தும், அபாரமான அலங்காரத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. மயில் தோகையின் வடிவம் போல அமைக்கப் பட்டிருப்பதால், அதை மயில் அறைகள் என்று அழைக்கின்றனர்.ஒவ்வொரு அறையின் வேலைப்பாடுகளும், வண்ணங்களும், தரை அலங்காரமும் பார்ப் பவர்களை பிரமிக்க வைக்கும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது.ஒரு வகை, ஓக் மரங்களால் கட்டப்பட்ட இந்த அறைக்குள் நுழைந்தாலே, நம்மை சுற்றி தோகை விரித்த மயில்கள் இருப்பது போன்ற உணர்வு தோன்றி விடுவதாக கூறுகின்றனர் சுற்றுலா பயணிகள்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !