உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சொன்னது நீதானா?* சில நாட்களாகவேஉன் முகத்தாமரைமலராத மொட்டாகவேமுகிழ்த்திருக்கிறது!* புன்னகை முத்துக்களைசிரித்துச் சிந்தாமல்உன் இதழ்களுக்குள்ளேநீ சேமித்துக் கொண்டதனால்மனதால் மட்டுமேநான் நஷ்டப்பட்டிருக்கிறேன்!* என் ஞாபகக் குளிரில்உன் நினைவுகளையேபோர்வையாக்கிக் கொள்கிறேன்!* என் உதடுகள்உச்சரித்த வார்த்தைகளில்ஏதாகிலும் ஒன்று,உன் இதயத்தைதைத்திருக்கக்கூடும்!* என்னையே அறியாதஅந்தத் தீராத வார்த்தைக்காகஉன்னில் அடைக்கலமாகியிருக்கும்என் இதயத்தைகழற்றி எறிந்து விடாதே!* அது,நீ தலையில் சூடியவாடிய பூ அல்ல...உன் ஆன்மாவோடுஐக்கியமாகியிருக்கும்என்றும் வாடாத அன்பு!* நீ எங்கிருந்தாலும்அது உனக்காக மட்டுமேஎப்போதும் துடித்துக் கொண்டேயிருக்கும்!— ஜோதி பாரதி, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !