உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பஞ்சம்!கட்சிகளுக்கும், காட்சிகளுக்கும்பஞ்சமில்லை இந்த நாட்டில்!அடைமொழிதலைவர்களுக்கும்தலைவிகளுக்கும் பஞ்சமில்லை!கொடிகளுக்கும்செலவு செய்ய கோடிகளுக்கும்பஞ்சமில்லை!விளம்பரங்களுக்கும்கலவரங்களுக்கும் பஞ்சமில்லை!தொண்டர்களுக்கும்அடித்துக் கொள்ளும்குண்டர்களுக்கும் பஞ்சமில்லை!கூட்டங்களுக்கும்கூட்டி வரும் ஆட்களுக்கும்பஞ்சமில்லை!ஊற்றிக் கொடுக்க மதுவிற்கும்உண்டு மகிழ பிரியாணிக்கும்பஞ்சமில்லை!முழக்கத்திற்கும்ஒருவரை ஒருவர் ஏசும்சவால்களுக்கும் பஞ்சமில்லை!எல்லா வளங்களும் உள்ளஇந்த மண்ணில் பஞ்சம் எல்லாம்அறிவிற்குத்தான்!—'சொல் கேளான்' ஏ.வி.கிரி.சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !