கவிதைச்சோலை!
உயர்வும் தாழ்வும்!கீழ் நிலையால் பார்க்கப்படும்எதுவொன்றும் காலச் சுழற்சியில்உயரத்தில் சென்று அமரும்!வறுமையால்கிழிந்த ஆடை உடுத்துவதுகேவலமாய் பார்க்கப்பட்டது...இன்று கிழித்துவிட்டு தைப்பதேபேஷனாகிப் போனது!பழைய சோறும் கூழும்ஏழைகளின் உணவென்றுஏளனமாய் கருதப்பட்டது...இன்று, 'ஏசி' உணவகங்கள்அவற்றை விற்பனைக்கு வைத்துஆரோக்கிய உணவென்றுஅறுதியிட்டுக் கூறுகின்றன!வியர்வை சிந்தி, மிதி வண்டிமிதித்தவர்களின் கனவுமோட்டார் பைக்காக இருந்தது...இன்று, வீதிகளில் 'ஸ்மார்ட்' சைக்கிள் வாடகைக்கு வந்துஉடல்நலத்தை பேணச் சொல்கிறது!மஞ்சள் துணிப் பையைபுறம் தள்ளிமக்காத நெகிழிப் பைகள்அரசாண்டது ஒரு காலம்...இன்று, மாசு கேடென்றுஅவை ஒதுக்கப்பட்டுபட்டொளி வீசுகின்றனபருத்திப் பைகள்!உயர்வும் தாழ்வும் பார்க்கும் பார்வையில்தானே ஒழியபயன்படுத்தப்படும்பொருட்களில் அல்ல!இ.எஸ். லலிதாமதி, சென்னை.