உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இருள் வாழ் இனம்...மண் புழுக்களுக்குமருந்தடித்துவிட்டுமனக்கவலையில் இருக்கிறேன்மகசூல் இல்லையென்று!குளங்களில்குப்பைகளை கொட்டிவிட்டுகுழப்பத்தில் இருக்கிறேன்குடிக்க நீர் இல்லையென்று!தெருக்களில்கற்களை பதித்துவிட்டுபற்களை கடிக்கிறேன்பாதங்கள் சுடுகிறதென்று!கட்டப்பஞ்சாயத்துக்குகல்லறை கட்டிவிட்டுகாத்துக் கிடக்கிறேன்கறுப்பு கோட்டுகளின் தீர்ப்புக்கு!நரிக்கூட்டத்துக்குவரி கட்டிவிட்டுபரிதாபத்தில் இருக்கிறேன்பரிபாலனம் சரியில்லையென்று!ஜாதி, மதங்களுக்குசந்தனம் பூசிவிட்டுசங்கடத்தில் இருக்கிறேன்நந்தவனம் நாறுகிறதென்று!நலிந்தவர்களுக்குநன்மை செய்துவிட்டுநாதியற்று இருக்கிறேன்நல்லதுக்கு காலமில்லையென்று!ஆம்...வெள்ளி நட்சத்திர வீதிகளில்விளக்குகளை அணையவிட்டுஇதயத்தை தொலைத்துஇருளில் நிற்கும் இனம் நான்!நலம் தரும் என்றநஞ்சு கலந்த நாகரிககால மாற்றத்தின் கட்டாயத்தைகை கட்டி கடந்து போகிறேன்!நாளையகதிரவனின் காலைப்பொழுதுஇருட்டு சமுதாயத்திற்குவெளிச்ச கதிர்களை வீதியெங்கும்வீசும் என்ற நம்பிக்கையில்!க. அழகன், விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !