கவிதைச்சோலை!
இயற்கை பாடம்!அதிகாலை வானில்உதிப்பது கதிரவன் அல்லகடமையுணர்வு!கடலிலிருந்துகரைக்கு தாவுவதுஅலைகளல்லவிடா முயற்சி!தேன் கூட்டில்இனிப்பது தேனல்லஉழைப்பு!பாறை இடுக்கிலும்முளைத்திருப்பதுதாவரமல்லதன்னம்பிக்கை!துாக்கணாங்குருவிகட்டியிருப்பதுகூடல்ல சாதனை!காக்கைகள்ஒன்று கூடி உண்ணுவதுஉணவல்ல ஒற்றுமை!இருட்டறையில்மெழுகுவர்த்தி தருவதுவெளிச்சமல்ல தியாகம்!காத்திருந்த கொக்கின்வாயில் இருப்பதுமீனல்ல குறிக்கோள்!மூங்கிலில் வண்டுபோடுவதுதுளையல்ல இசை!மலையிலிருந்துகொட்டுவதுநீரின் வீழ்ச்சியல்லநதியாகும் பரிணாம வளர்ச்சி!பூமிக்குள் புதைவதுவிதையின் மரணமல்லவிருட்சத்தின் ஜனனம்!அமாவாசை பின்வளர்ந்து வருவதுபிறையல்லநிலவின் சுய முன்னேற்றம்!பேதமின்றிவானிலிருந்துஎல்லாருக்கும்பொழிவது மழையல்லசமத்துவம் - சமதர்மம்!கு. வைரச்சந்திரன், திருச்சி.