அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —மத்திய அரசில் பணிபுரியும், 25 வயது ஆண் நான். சிறு வயதில், உறவு முறை அண்ணன் ஒருவர், என்னை, அவனுடைய இச்சைக்காக பயன்படுத்தினான்; கிட்டத்தட்ட, ஏழு ஆண்டுகள் என்னை உபயோகித்தான். பின், எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததும், அவனிடம் இருந்து விலகி விட்டேன்.அந்த வயதில், அது என்ன உறவு என்றும், அதை என் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதும் எனக்கு தெரியவில்லை. நான் வீட்டில் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டேன். ஆனால், என் சகோதரிக்கு (அக்கா) முழு சுதந்திரம் உண்டு; எனக்கு அதில் எள்ளளவும் கிடையாது.என், 15 வயது முதல், என் தந்தைக்கு, என் மீது வெறுப்பு ஏற்பட்டது; அது ஏன் என்று இன்று வரை என்னால் யூகிக்க முடியவில்லை. அதற்குமுன், என் மீது பாசமாகத் தான் இருந்தார். இப்போது, என் மீது அவருக்கு பாசம் கிடையாது; என் சம்பளம் மட்டும் தான் முக்கியம்.என் குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்து, மீதமுள்ள பணத்தை சேர்த்து வைத்து, ஒரு லட்சம் ரூபாய் ஆனவுடன், அவருக்கு தர வேண்டும்; இல்லையென்றால், சொற்களால் என்னை காயப்படுத்துவார். மேலும், தற்போது என் குடும்ப சூழ்நிலை காரணமாக, எனக்கு திருமணம் மீது பிடிப்பும் ஏற்படவில்லை; திருமணம் செய்ய பணம் கொஞ்சம் கூட கிடையாது. தந்தையால் ஏற்பட்ட கடன் மட்டும், ஆறு லட்சம் ரூபாய்! இப்படியிருக்க, என்னால், எப்படி திருமணத்தை பற்றி யோசிக்க முடியும்?இப்போது என் எண்ணமெல்லாம், கடனை அடைக்க வேண்டும் என்பதில் தான் உள்ளது.என் தந்தை என்னை நடத்தும் விதத்தால், இவ்வுலகில் வாழ வேண்டும் என்ற எண்ணமே, என்னை விட்டு விலகி விட்டது.அம்மா... கடந்த இரு ஆண்டுகளாக என் உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, தற்சமயம், இருவரும் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக் கொள்கிறோம்.ஒருமுறை மட்டும் எல்லை மீறி நடந்து கொண்டார்; அது, எனக்கு தவறாக தோன்றவில்லை. ஆனால், ஆண் ஆண் உறவை சரியென்று நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.தற்போது, அவரது வயது, 34. மிகவும் பாசமுடன், ஒரு தந்தையைப் போல், என்னை பார்த்துக் கொள்கிறார். எங்களால் பேசிக் கொள்ளாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது.நான் மிகவும் குழம்பியுள்ளேன். 'இவருடன் ஏன் இத்தகைய பாசப் பிணைப்பு... ஏன், எனக்கு திருமணம் பற்றி யோசிக்க கூட தோன்ற மறுக்கிறது... நான் ஏன் வாழ வேண்டும்...' என சிந்திக்கிறேன். நான் இறந்தால் என் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெறும் வகையில், காப்பீடு செய்துள்ளேன். பேசாமல், என் உயிரை மாய்த்து விடலாமா... வாழத்தகுதி இல்லாத நான் இனி, எதற்கு வாழ வேண்டும் இவ்வுலகில் என, நினைத்து குழம்புகிறேன்.நல்லதொரு பதிலை எதிர் பார்க்கிறேன்.— இப்படிக்கு,தங்கள் மகன்.அன்பு மகனுக்கு —சிறுவயதில், ஓரின சேர்க்கையாளனாக இருந்து, பின், விவரம் தெரிய ஆரம்பித்தவுடன், அதிலிருந்து விலகி விட்டாலும், தெரிந்தோ, தெரியாமலோ ஓரின சேர்க்கை உறவை ரசித்திருக்கிறாய். அதன்மீது, ரகசிய ஈர்ப்பு உனக்குள் இருக்கிறது.உன் மீது, உன் தந்தைக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்? நீ ஓரினசேர்க்கையாளன் என்பது, அவருக்கு தெரிந்து விட்டது கூட காரணமாக இருக்கலாம். அதை உன்னிடம் நேரடியாக கேட்க முடியாமல், வெறுப்பை உமிழ்கிறார் என நினைக்கிறேன்.உன் தந்தையால், ஆறு லட்சம் ரூபாய் கடன் என்று கூறியிருக்கிறாய். மாது, மது, சூதுகளில் உன் தந்தை ஏகமாய் பணம் செலவழிக்கிறாரோ... எப்போது நீ, உன் தந்தையால் கடனாளி ஆனாயோ, உடனே அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். உன் தந்தைக்கும், உனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை களையவும், அவரால், நீ கடனாளி ஆவதை தடுக்க, அவருடன் மனம் விட்டு பேசியிருக்க வேண்டும். பேச்சில் அவர் ஒத்து வராவிட்டால், அவருடனான உறவை துண்டித்து, சுதந்திரமாக செயல்படு.கடனை விட, ஓரின சேர்க்கை மீது இருக்கும் விருப்பமே, உனக்கு முறையான திருமணத்தின் மீது பிடிப்பில்லாமல் செய்கிறது. இவ்விருப்பத்தின் தொடர்ச்சியே, தற்போது, 34 வயது உறவுக்கார ஆணுடனான உறவு! அது தவறில்லை என, நீயே நியாயப் படுத்துகிறாய்.உன் தற்கொலை எண்ணம் அபத்தமானது. தவறான முறையில் பணத்தை செலவு செய்யும் உன் தந்தைக்கு, உன் ஆயுள்காப்பீட்டு பணம், 25 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டுமா?உன்னுடன் ஓரின சேர்க்கை வைத்திருக்கும் ஆண், ஒரு நாளும் உனக்கு தந்தையாக மாட்டார். அவருடனான உறவை உடனே கத்தரி. இல்லையென்றால், அடுத்த, 10 ஆண்டுகளுக்கு அவருடனான ஓரின சேர்க்கை தொடரும். திருமண வயதை தவற விட்டு விடுவாய். வயோதிகத்தில் அனாதையாய் நிற்பாய். புதிதாக ஓரின சேர்க்கைக்கு யார் கிடைப்பர் என அலைய ஆரம்பிப்பாய்.என்ன தான், 21 ஆம் நூற்றாண்டு, சர்வதேச சமூகம், ஓரினசேர்க்கையை நியாயப்படுத்தினாலும், அது இயற்கைக்கு முரணானது. மெய்யான சிற்றின்பம் ஓரினசேர்க்கையில் கிடைக்காது. ஒரு பெண்ணுடன் தாம்பத்யம் செய்து, ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் பெற்று கொள்வது இறைவனுக்கு உவப்பானது.ஓரின சேர்க்கை விருப்பத்தை, சாக்கடையில் விட்டெறி. திருமணம் செய்து கொண்டும், அப்பா ஏற்படுத்திய கடனை அடைக்கலாம். தற்கொலை எண்ணம் கூட பிரச்னைகளை எதிர்கொள்ள தைரியமில்லாத எஸ்கேப்பிஸம் தான்.ஓரின சேர்க்கையாளர்கள் எதிர்மறை கற்பனாவாதிகள். தலைவாசல் வழியாக பிரவேசிக்காமல், கொல்லைபுற வாசல் வழியாக பிரவேசிக்கும் அபத்தர்கள். அவர்கள் மனித குல நாகரிகத்தின் புற்றுநோய். நீயும், அவர்களில் ஒருவராக சேர்ந்து விடாதே! ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணால் கிடைக்கும் சுகங்கள், இன்னொரு ஆணால், ஒரு போதும் தர முடியாது. இயற்கையோடு கைகோர்த்துக் கொள் மகனே!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.