தொப்பை போலீசுக்கு தண்டனை!
நம்ம ஊரு போலீசுக்கு தான், தொப்பை பெரிதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளிலும், இதே நிலை தான் உள்ளது. அதிலும், ஆசிய நாடான, தாய்லாந்தில் ரொம்ப மோசம். பெரும்பாலான போலீசார், தொந்தியும், தொப்பையுமாகத் தான் வலம் வருகின்றனர்.'இவர்களை போலீசார் என கூறினால், யாராவது நம்புவரா...' என, புலம்பிய தாய்லாந்து அரசு, அதிரடி முடிவை எடுத்துள்ளது.இதன்படி, நாடு முழுவதும் உள்ள தொப்பை போலீசாரை கணக்கெடுத்து, அவர்களை எல்லாம், பாக் சோங் என்ற நகரத்துக்கு வரவழைத்துள்ளனர். அங்குள்ள பயிற்சி முகாமில், தொப்பை போலீசாருக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.காலையில் இருந்து மாலை வரை அளிக்கப்படும் இந்த பயிற்சியால், தொப்பை போலீசார், வெலவெலத்து போயுள்ளனர். 'எங்கள் நாட்டு போலீசாரும், விரைவில், 'ஸ்மார்ட்' ஆன போலீசாராகி விடுவர்...' என்கின்றனர், தாய்லாந்து மக்கள். நம்மூருக்கு இது மாதிரி ஒரு பயிற்சி முகாம் வருமா?- ஜோல்னாபையன்.