உள்ளூர் செய்திகள்

ஆடை கட்டி வந்த ரயிலே!

படைப்பாளிகள், தங்களின் படைப்புகளை பிரபலப்படுத்த, இப்போதெல்லாம், ரூம் போட்டு, யோசிக்க துவங்கி விட்டனர். போலந்து நாட்டை சேர்ந்த, ஒலோக் என்ற ஆடை வடிவமைப்பாளருக்கு, தன் படைப்பாற்றலை வெளிப்படுத்த, 'ரயிலுக்கு ஆடை தயாரித்தால் எப்படி இருக்கும்?' என்ற புதுமையான யோசனை, ஏற்பட்டது. அடுத்த நொடியே, தன், குழுவினருடன் களமிறங்கிய இவர், கலர், கலரான துணிகளை வாங்கி, ரயில் பெட்டிகளுக்கு உடை தயாரிக்கும் வேலையில், ஈடுபட்டார். அடுத்த சில நாட்களிலேயே, தான் வடிவமைத்த உடையை, ரயிலுக்கு அணிவித்து, அதில், தன் குழுவினருடன் உற்சாகமாக வலம் வந்தார், ஒலோக். அவர் நினைத்தது மாதிரியே, அவரின் இந்த வித்தியாசமான முயற்சி, அவரை, சர்வதேச அளவில், பிரபலமாக்கி விட்டது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !