கை ரிக் ஷாவில் சவாரி செய்யலாம்!
ஒரு காலத்தில், சென்னை சாலைகளில், கை ரிக் ஷாக்கள் சவாரிக்காக காத்துக் கிடந்ததை பார்த்திருக்கலாம். தமிழக முதல்வராக இருந்தபோது தான், கை ரிக் ஷாக்களை ஒழித்தார், கருணாநிதி. அதன் பின், மூன்று சக்கர சைக்கிள் ரிக் ஷாக்கள் வந்தன. இப்போது, அந்த இடத்தில், ஆட்டோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மேற்கு வங்க மாநில தலைநகரமான, கோல்கட்டாவிலும், வங்காளத்தின் பல இடங்களிலும், இன்றும் கை ரிக் ஷாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மேற்கு வங்க மாநிலம், ஹவுரா பாலத்துக்கு கீழே, நுாற்றாண்டுக்கு முன் பயன்படுத்திய, 'கர்லா கட்டை'யை பயன்படுத்தி, ஒருவர், உடற்பயிற்சி செய்வதை காணலாம்.மேலும், கோல்கட்டா மாநகர சாலைகளில், வாடகை, 'அம்பாசிடர்' நிறுவன கார்கள், இன்றும் அதிகமாக ஊர்ந்து செல்கின்றன. இது மட்டுமா, இன்னும் எத்தனையோ பழக்க வழக்கங்கள், இன்னும் அங்கு பின்பற்றப்படுகின்றன. —ஜோல்னாபையன்.