சரஸ்வதி பூஜையும், புதன் கிரகமும்!
சரஸ்வதி பூஜை, குறிப்பிட்ட சில ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில் புரட்டாசி மாதத்திலேயே வரும். சரஸ்வதி பிறந்த திதி நவமி; திதியின் அடிப்படையில், சில சமயங்களில், ஐப்பசியில் வரும்.பெரும்பாலும், புரட்டாசியில் இப்பூஜை நடத்தப்படுவதற்கு காரணம், நவக்கிரகங்களுக்கு நடுநாயகமான சூரியன், சித்திரையில் மேஷ ராசியில் துவங்கி, புரட்டாசியில் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசிக்குரிய கிரகம் புதன்; இவரை, வித்யாகாரகன் என்பர். 'வித்யாகாரகன்' என்றால் கல்வி, புத்தி மற்றும் தொழில் ஆகிய அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பவர் என, பொருள்.புதனுக்குரிய ராசியான கன்னியில், கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடுவது உத்தமம்.