உள்ளூர் செய்திகள்

இப்படி ஒரு மனிதரா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து, டொனால்டு டிரம்புக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும், வாய் தகராறு இருந்து வருகிறது.தேர்தலின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து, தற்போது, 'வாட் ஹாப்பேண்ட்' என்ற தலைப்பில், புத்தகம் எழுதியுள்ளார், ஹிலாரி. அதில், டிரம்ப்பை பற்றி, 'செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த விவாதத்தின்போது, நான், பேசும்போது, என் அருகில் நின்றிருந்த டிரம்ப், என்னையே உற்று நோக்கியபடி இருந்தார். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஒரு கட்டத்தில், என் முதுகுக்கு பின் வந்து,'புஸ் புஸ்...' என, மூச்சு விட்டார்; வெறுத்துப் போய் விட்டேன்...' என்று எழுதியுள்ளார். இதுபோன்ற பல, 'கசமுசா' விஷயங்களைப் பற்றி கூறி, கடுமையாக விமர்சித்துள்ளார் அந்த புத்தகத்தில்!— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !