நாய் கறிக்கு வந்த மவுசு!
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் தேசிய உணவு எது என்று கேட்டால், நாய் கறி என்று சொல்லும் அளவுக்கு, அங்குள்ள மக்களின் விருப்ப உணவாகி உள்ளது.வட வியட்நாமில், சாப்பா என்ற ஊரில், ஏராளமான கறி கடைகள் உள்ளன. அங்கு விற்கப்படும் நாய் கறிக்கு, 'டிமாண்ட்' அதிகம் என்பதால், மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.பல அளவுகளில் உள்ள நாய்களை கொன்று, உடலை தீயில் பக்குவமாக வேக வைத்து, விற்பனைக்கு வைக்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், நாய் கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.இங்கிருந்து நாய் கறியை வாங்கிச் சென்று, சமைத்து, விருந்தினர்களுக்கு பரிமாறுவதை பெரிய கவுரவமாகவும் கருதுகின்றனர்.ஜோல்னாபையன்