ராகுல் சந்திக்க விரும்பும் செவிலியர்!
காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும், காதரைன் தாமஸ் என்ற பெண்மணியை காண, விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். காதரைன் தாமஸ் யார்! பெரிய தொழிலதிபரோ, ஜாதி, மத தலைவரோ இல்லை. பின், ஏன் இவரை காண, விரும்புகின்றனர்?காதரைன், ஓய்வு பெற்ற செவிலியர். டில்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில், 1960ல் பணிக்கு சேர்ந்த இவர், 'வி.வி.ஐ.பி' சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்திரா, சஞ்சய், ராஜீவ் போன்றோரின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்த போது, இவர், உடன் இருந்து வேலை செய்தார். 'இந்திராவின் உடலில், கழுத்து முதல் இடுப்பு வரை ஏகப்பட்ட குண்டுகள் துளைத்து இருந்தன. முகத்தில் காயங்கள் இல்லை. அவருக்கு, இறுதி ஆடை அலங்காரம் செய்துள்ளேன். ராஜீவின் உடல், சுக்கு நூறாக இருந்தது. முகத்தில், மூக்கின் ஒரு சிறு பகுதியும், கிருதாவும் மட்டும் தான் இருந்தது...' என்கிறார். நேரு குடும்பத்தில் உள்ள மூன்று பிரபலங்களின் உடல்களை பராமரித்த இவரை காண, ஆவல் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது.— ஜோல்னா பையன்.