உள்ளூர் செய்திகள்

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...

செம்மீன் என்ற மலையாளப் படத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை, ஷீலா. இவர், ஆரம்ப காலத்தில், தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஆனால், மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததும், தமிழை விட்டு மலையாளத்துக்கு சென்று விட்டார். அதற்கான காரணத்தை, சமீபத்தில் ஒரு நிருபர் கேட்ட போது, சிரித்தபடி, 'அந்த காலத்தில், நடிகைகளின் பின்புறம் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, பின்புறத்தில் ரப்பர் பேடுகளை வைத்து கட்டுவர். அதுமட்டுமல்லாமல், இடுப்புக்கு மேல் தொப்புளை மறைத்தபடி தான் புடவை கட்டுவர். 'இப்படி, ரப்பர் பேடுகளை கட்டி நடிக்க மனமில்லாததால் தான், தமிழ் படங்களை தவிர்த்தேன்...' என்று கூறியுள்ளார்.- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !