தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்ப்பதன் காரணம்...
பாற்கடலில் அமுதம் கடைந்த போது, அவதரித்தவள், லட்சுமி. ஆமையாக கடலுக்குள் மூழ்கியிருந்த திருமாலை, திருமணம் செய்ய விரும்பினாள்; ஆனால், லட்சுமியை அடைய விரும்பி, அசுரர்கள் அவளைத் துரத்த, எள் தோட்டத்திற்குள் ஓடி மறைந்தாள். அவள் ஓடியதால், எள் செடிகளில் இருந்து வெளிப்பட்ட எண்ணெயுடன், கலந்து விட்டாள், லட்சுமி. அதனால், அசுரர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், லட்சுமி நம்மோடு என்றும் ஐக்கியமாகி விடுவாள்; அவள் இருக்கும் இடத்தில், செல்வமும் குறையாது என்பது நம்பிக்கை.