டெஸ்ட் டியூப் பேபி சகாப்தம்!
ஜூலை 25, 1978ல் தான், உலகின் முதல், 'டெஸ்ட் டியூப்' குழந்தை பிறந்தது. இங்கிலாந்து நாட்டில், ஓல்ட் ஹாம் ஜெனரல் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு, லுாயீஸ் ஜாய் பிரவுன் என, பெயர் சூட்டினர். அவர் வளர்ந்து, திருமணமாகி, ஒரு குழந்தைக்கும் தாயாகி, 47 வயதிலும் முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இன்று உலகில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட, 'டெஸ்ட் டியூப்' குழந்தைகள் உள்ளனர். லெஸ்ஸி - -ஜான் பிரவுன் தம்பதியினருக்கு, ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லை என, மருத்துவர் பேட்ரிக் ஸ்டெப்டோவை அணுகிய போது, அவர் தான், 'டெஸ்ட் டியூப்' குழந்தை பிறக்க முதன் முதலில் வழிவகுத்தார். — ஜோல்னாபையன்