இது, 28 ஆண்டு தவம்!
ஐரோப்பிய நாடான, உக்ரைனைச் சேர்ந்தவர், அலெனா கிராவ்சென்கோ, 33. இவரை தெரியாத யாருமே, உக்ரைனில் இருக்க முடியாது; ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், அவ்வளவு பிரபலம்.நீளமான கூந்தல் தான், நாடு முழுவதும், அவரை பிரபலமாக்கி விட்டது. 28 ஆண்டுகளாக, அலெனா, முடியை வெட்டவில்லையாம். தற்போது, அவரது கூந்தலின் நீளம், 6.5 அடி.தன் கூந்தலை விதம் விதமாக அலங்காரம் செய்து, அதை, புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது தான், இவரது பொழுது போக்கு.'நீளமான கூந்தல் தான், பெண்களுக்கு அழகு என, என் அம்மா, அடிக்கடி கூறுவார். இதனால், கூந்தல் மீது, எனக்கு மோகம் வந்து விட்டது. இது, என், 28 ஆண்டு தவம். கூந்தல் தான், இப்போது என் அடையாளமாகி விட்டது. கூந்தல் இல்லாத பெண்ணாக என்னை, கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை...' என்கிறார், அலெனா.— ஜோல்னாபையன்.