இதப்படிங்க முதல்ல
கதையை மாற்ற சொன்ன விஜய்!விஜய் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கவுள்ள, யோஹன் அத்தியாயம் ஒன்று படம், வெளிநாட்டுக்கு செல்லும் குற்றவாளிகளை புலனாய்வு செய்யும் கதையாம். முதலில், இதில் நடிக்க சம்மதம் தெரிவித்த விஜய், 'இந்த கதை எனக்கு செட் ஆகாது; அதனால், விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி, காதல் கதையை ரெடி பண்ணுங்கள்...' என்று கூறியுள்ளார். இதனால், மீண்டும் கதை விவாதம் நடத்தி வருகிறார் கவுதம் மேனன்.— சினிமா பொன்னையா.தாசி வேடத்தில் ஸ்வேதா மேனன்!ஆதி - தன்ஷிகா நடித்து வரும், அரவாண் படத்தில், தாசி வேடத்தில் நடிக்க, சில நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தார் அப்பட இயக்குனர் வசந்தபாலன். ஆனால், எந்த நடிகையும் முன்வராத போது, அழையா விருந்தாளியாக, வலியச் சென்று அந்த வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ரதி நிர்வேதம் பட புகழ், ஸ்வேதா மேனன். தேவைப்பட்டால் காமக் கொடூர அவதாரம் எடுக்கவும் தான் தயாராக இருப்பதாகவும், இயக்குனருக்கு பச்சைக் கொடி காண்பித்துள்ளார். இன்னம் இன்னம் இசை சொல் அநேகம்!— எலீசா.மாதவன் - ஆர்யா நடிக்கும் ஆக்ஷன் படம்!வேட்டை படத்தில் மாதவன், ஆர்யா இருவரும் அண்ணன், தம்பியாக நடிப்பதால், சென்டிமென்ட் படமாக இருக்குமோ என்று டைரக்டர் லிங்குசாமியை கேட்டால், 'இது பக்கா ஆக்ஷன் படம்...' என்கிறார். மேலும், இப்படத்தில், ரயில் குண்டு வெடிப்பை பிரதானமாக வைத்து, கதை பண்ணி இருப்பதாகவும் சொல்கிறார்.— சி.பொ.,தனுஷ் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம்!இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படங்களை இயக்கிய சிம்பு தேவன், அடுத்து, தனுஷை வைத்து, மாரீசன் என்றொரு படத்தை இயக்குகிறார். 12ம் நூற்றாண்டு கதையில் உருவாகும் இப்படம், 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. இதுவரை, தனுஷ் நடித்த படங்களில் இதுவே கூடுதலான பட்ஜெட் படம்— சி.பொ.,இருபது பேரை தத்தெடுத்த ஹன்சிகா!ஹன்சிகா மோத்வானியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், ஒவ்வொரு குழந்தையை தத்தெடுத்து வருகிறார் அவரது தாய்குலம். அந்த வகையில் இதுவரை மும்பையைச் சார்ந்த, இருபது குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான படிப்பு உள்ளிட்ட இதர செலவுகளையும் தானே வழங்கி வருகிறார். இந்நிலையில், தன், 21வது பிறந்த நாளின் போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.— எலீசா.சிம்பு படத்தில் இந்தி நடிகை!தரணி இயக்கத்தில் தான் நடித்து வரும், ஒஸ்தி படத்தை பிரமாண்டப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமடைந்துள்ளார் சிம்பு. அதன் காரணமாக, அப்படத்தில் இடம்பெறும் ஒரு அதிரடிப் பாடலில் ஆடுவதற்கு, தீபிகா படுகோனே, பிபாஷா பாசு, கத்ரீனா கைப் ஆகிய நடிகைகளில் யாரேனும் ஒருவரை, 'புக்' பண்ண திட்டமிட்டுள்ளார். இந்தப் பாடலில் அவர்கள் ஆட, ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளரை தயார் படுத்தி வைத்துள்ளார்.— சி.பொ., தமிழுக்கு இறக்குமதியான காஜலின் தங்கை!ஓமைந்தோ ஈவேளா என்ற தெலுங்கு படம்தான் தற்போது தமிழில், இஷ்டம் என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. விமல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், தெலுங்கு பதிப்பில் நடித்த நிஷா அகர்வாலே தமிழிலும் நடித்துள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையான இந்த நிஷா, இஷ்டம் படம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும் எனக்கு ரொம்ப இஷ்டம் என்று சொல்லி, புதிய படங்களுக்காக அக்கா காஜலுடன் சேர்ந்து, சில பிரபல நடிகர்களின் படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். உளுவை குஞ்சுக்கு நீஞ்சக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?— எலீசா.பிரகாஷ் ராஜ் எடுக்கும் ரீ-மேக் படம்!தமிழில், ராதா மோகன் இயக்கிய, அபியும் நானும் படத்தை கன்னடத்தில், ரீ-மேக் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது, ஒரு மராத்திய படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார். இப்படத்தில் தானும் ஒரு ரோலில் நடிப்பவர், முதன் முறையாக தன் டூயட் மூவிஸ் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்க, இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.— சினிமா பொன்னையா.இந்திக்கு சென்ற கார்த்திகா!கோ படத்திற்கு பிறகு, இந்தி சினிமாவிற்கு சென்று விட்டார் கார்த்திகா. அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தையில் இருப்பதாக சொல்லும் அவர், 'தமிழைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தால் மட்டுமே மீண்டும் நடிப்பேன்; இல்லையேல், நான் பிறந்து வளர்ந்த மும்பையிலேயே தங்கியிருந்து, நிரந்தர இந்தி நடிகையாகி விடுவேன்...' என்கிறார். பட்டறை வாய்த்தால், பணி வாய்க்கும்!— எலீசா.அவ்ளோதான்!