உள்ளூர் செய்திகள்

இதுவும், தண்டனை தான்!

என் மகன் அரசு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போடுவதற்காக பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆங்கிலத்தில் திக்கி திக்கி, ஏதோ பேசியபடி இருந்தான், வீட்டிற்கு வந்ததும், இதுபற்றி அவனிடம் கேட்ட போது, 'எங்க வாத்தியார் எனக்கு கொடுத்த தண்டனை...' என்றான். 'என்னடா சொல்றே...' என்றேன் புரியாமல். 'வகுப்பில் ஏதாவது குறும்பு செய்தால், ஆங்கிலத்தில் பத்து நிமிடங்கள் பேசணும்; இல்லன்னா, 25 பொது அறிவு வினா விடைகள் எழுதி வந்து, வகுப்பில் படித்து காட்டணும்...' என்றான். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு மத்தியில், இப்படி ஒரு ஆசிரியரா என்று, அந்த ஆசிரியரை மனதார பாராட்டினேன்!— பி.பரமசிவம், திருப்பூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !