குளிர்ச்சியான சருமத்தை பெற...
தர்பூசணி சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், பொலிவான, மென்மையான சருமத்தை பெறலாம்* வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் தர்பூசணி சாறு கலந்து முகம் மட்டுமின்றி, கை, கால் முழுவதும் தடவி, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்னையும் தடுக்கப்படுகிறது* பால் பவுடர் மற்றும் தர்பூசணி சாறு சேர்த்து, 'பேஸ்ட்' போல் செய்து, முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீங்கும்* தர்பூசணி சாறுடன் சிறிது தேன் கலந்து, முகம், கை, கால்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். தேன், சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குகிறது. * சருமத்தில் வெளிப்படும் முதுமை தோற்றத்தை தடுக்க, அவகோடா பழத்தை அரைத்து, அதில் தர்பூசணி சாறு கலந்து, 'மாஸ்க்' போடலாம்* வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியை அரைத்து, 'பேஸ்ட்' போல் செய்து, சருமத்தில் தடவி, 20 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதோடு, எரிச்சலையும் தடுக்கிறது.