உள்ளூர் செய்திகள்

தக்காளி, விஷ ஆப்பிள்!

கி.பி., 18ம் நுாற்றாண்டில், ஐரோப்பாவில், தக்காளிக்கு, விஷ ஆப்பிள் என பெயர் உண்டு. இதை வசதியான மனிதர்கள் மட்டுமே பயன்படுத்திய காலம். தக்காளியை பதார்த்தங்களில் இணைத்து சாப்பிட்டவர்களில் பலருக்கு, நோய் வந்து இறந்தும் போயினர். இதனால், 'விஷ ஆப்பிள்' என, தக்காளி அழைக்கப்பட்டது.உண்மை என்னவென்றால், அவர்கள் பயன்படுத்திய தட்டுகள், வெள்ளீயம் மற்றும் காரீயம் கலந்து செய்யப்பட்டவை. இதுவே, விஷத்துக்கு காரணம் என, ஆய்வாளர்கள் பின்னர் கூறினர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !