உள்ளூர் செய்திகள்

சுற்றுலா ஸ்பெஷல்!

பூவே... வெள்ளை நிற பூவே!கிழக்கு ஆசிய நாடான தைவான் நாட்டின், யுனியான் பகுதியில், ஏப்ரல் - மே மாதங்களில், 'டங்' என ஒரு வகை மரம் பூத்துக் குலுங்கும்.ஹாக்கா என்ற இனம், சீனாவிலிருந்து இங்கு குடியேறியபோது, தங்களுடன், 'டங்' மர விதைகளையும் எடுத்து வந்து விதைத்தனர்.இதன் பலனாக, இன்று, இந்த பகுதியே வெள்ளை பூக்களால் பூத்துக் குலுங்குகிறது. இந்த பூக்கள், காலையில், மேலே பனி போர்த்தியது போல் காட்சியளிக்கும். இரவோ, இந்த பூக்களை மின் மினி பூச்சிகள் மொய்க்கும். இதனால், இரவில், இந்த பகுதியே, மின் மினி பூச்சிகளின் வெளிச்சத்தில் ஜொலிக்கும்.ஹாக்கா இன மக்கள், சமையலிலும் வல்லவர்கள். இங்கு வரும் சுற்றுலா பயணியர், இவர்களுடைய உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டு மகிழ்வர்.'டங்' மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுத்து, 'பெயின்ட்' தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர். பேப்பர் குடைகளில் இந்த எண்ணெயை தடவினால், 'வாட்டர் புரூப்' ஆக செயல்படும்.வீட்டு உபயோக பொருட்கள், பல் குத்தும் குச்சி, நெருப்பு குச்சி செய்யவும், 'டங்' மரம் பயன்படுகிறது! துாலிப் பூக்கள்!ஜம்மு - காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து, 9 கி.மீ., துாரத்தில், இந்திரா காந்தி நினைவகத்தில், துாலிப் பூங்கா அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்று. 30 ஏக்கரில் அமைந்துள்ள பூங்காவில், துாலிப் பூக்களில், 48 வகைகளை, 16 லட்சத்துக்கும் குறையாத மஞ்சள், செம்மஞ்சள், வெள்ளை உட்பட பல வண்ணங்களில், கண் குளிர பார்த்து மகிழலாம்.இவை அனைத்தும், மலைச் சரிவுகளில் உருவாக்கப் பட்டுள்ளன. இப்பூங்கா, 2007ல் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும், ஏப்ரல் 1 - 15 வரை, மலர் கண்காட்சி நடக்கும். அக்டோபர் வரை சீசன் காலம். அப்போது, இந்த பகுதியே, பூக்கள் மலர்ந்து, சூழ்நிலையே ரம்மியமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !