உள்ளூர் செய்திகள்

முதுகெலும்பு ஒட்டி பிறந்த, இரட்டை குழந்தைகள்!

மருத்துவத் துறையில் வியக்கத்தகு சாதனைகளை படைப்பதில், தங்களை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பதை, மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கின்றனர், அமெரிக்க டாக்டர்கள். அமெரிக்காவின் மெம்பிஸ் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, சமீபத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தன. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு குழந்தைகளும், முதுகு ஒட்டி பிறந்தன. அதாவது, முதுகெலும்பின் மேல் பகுதியில் துவங்கி, இடுப்பு எலும்பு வரை, இரண்டு குழந்தைகளின் முதுகும் ஒட்டி இருந்தது.ஆனாலும், அங்குள்ள பிரபல குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள், 13 நேரம் போராடி, அறுவைச் சிகிச்சை செய்து, இரண்டு குழந்தைகளையும், வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர். தற்போது, இரண்டு குழந்தைகளும், நலமுடன் உள்ளதாக, குழந்தைகளின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.டாக்டர்கள் கூறுகையில், 'பொதுவாக, ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால், அதில், ஒரு குழந்தை தான், இவ்வாறு முதுகெலும்பு ஒட்டிப் பிறக்கும். அதிலும், பெண் குழந்தைகள் தான், இவ்வாறு அதிகம் பிறக்கும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில், மூன்றில் ஒரு குழந்தை, ஒரு நாள் கூட, உயிருடன் இருக்காது. ஆனாலும், தற்போது மெம்பிசில் பிறந்துள்ள குழந்தைகள், நலமுடன் உள்ளது, எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத் துறையில், இது ஒரு மகத்தான சாதனை...' என, பெருமிதப்படுகின்றனர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !