உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள நண்பர் அவர். நம்மூர் அப்பளம், முறுக்கு, வடாம், ஊறுகாய், உருளைக்கிழங்கு சிப்ஸ், நேந்திரம் சிப்ஸ் போன்ற, 'ஐட்டங்களை' ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.அன்று, என்னை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார். நலம் விசாரித்து, 'பிசினஸ் எப்படி போகிறது...' என்றேன்.'அமோகமா இருக்கு, மணி. உங்களை எல்லாம் சந்தித்து, ரொம்ப நாளாச்சா... அதான், பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்...' என்றார்.அப்போது, அலுவலகத்தினுள் நுழைந்த, லென்ஸ் மாமா, 'தம்பி... (பெயரை குறிப்பிட்டு) என்ன இந்த பக்கம்? 'பிசி'யான ஆளாச்சே! எங்கெங்கோ, 'நொறுக்ஸ்' அனுப்பற... எங்க பக்கம் கொஞ்சம் ஒதுக்கக் கூடாதா?' என்றார்.உங்களுக்கு இல்லாததா, மாமா...' என்றவர், தான் வைத்திருந்த பெரிய பையில் இருந்து, முறுக்கு, சிப்ஸ் போன்றவைகளை எல்லாருக்கும் வினியோகித்தார்.இரண்டு, மூன்று, சிப்ஸ் பாக்கெட்களை எடுத்து, தனியாக 'ரிசர்வ்' செய்து கொண்டார், மாமா. எதற்கென்று உங்களுக்கு தெரியும் தானே! ஒரு, 'சிப்ஸ்' பாக்கெட்டை பிரித்து, சாப்பிட்டவர், 'இதற்கு ஈடு வேறெதுக்கும் இல்லப்பா...' என்று சிலாகித்தார். 'நீங்க மட்டும் இல்ல, மாமா. உலகம் முழுக்கவே இதுதான் நிலைமை. இன்றைக்கு உலகத்திலேயே பெரும்பாலோர் விரும்பி சாப்பிடற, 'ஸ்நாக்ஸ்' உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். உலகளவில், 30 பில்லியன் டாலர் (1 டாலர், 84 ரூபாய்) மதிப்புமிக்க சந்தையை பிடித்துள்ளது.'அதிலும், 'லேஸ்' கம்பெனி, ஒரே ஆண்டில், அமெரிக்காவில் மட்டும், 372 மில்லியன் (1 மில்லியன் 10 லட்சம்) சிப்ஸ் பாக்கெட்களை விற்றிருப்பதாக. சமீபத்தில் கணக்கு கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் எவ்வளவுன்னு அதில் குறிப்பிடப்படவில்லை. சிப்ஸ்க்கான மவுசை பார்த்துத்தான், பில் கேட்ஸ், 14 ஆயிரம்ஏக்கரில் உருளைக்கிழங்கு விவசாயம் பண்றார்.'இப்படி, கோடிக்கணக்கில் பணம் கொட்டும். உலகமே தின்று தீர்க்கிற உருளைக்கிழங்கு சிப்ஸை, செம கடுப்புல இருந்த ஒரு சமையல்காரர் தான் முதன் முதலில் கண்டுபிடிச்சார்ன்னு சொன்னால் நம்ப முடிகிறதா!'கடந்த, 1853, அமெரிக்காவில், நியூயார்க் நகரத்தில் இருந்த, 'மூன் லேக் ஹவுஸ்' என்ற, பிரபல ரெஸ்டாரன்ட்ல வேலை செய்த, ஜார்ஜ் கிரம் என்ற, கறுப்பின, 'செப்' தான் இதை கண்டுபுடிச்சார்.'ஒருநாள் இரவு, இவர் ரெஸ்டாரன்ட்டுக்கு வந்த ஒருவர், 'பிரெஞ்ச் பிரை'க்கு ஆர்டர் செய்தார். இவரும் செய்து அனுப்பினார். 'மொறு மொறுன்னு இல்லை...' 61637, வாடிக்கையாளர் திருப்பி அனுப்ப, இவர் மறுபடியும் செஞ்சு அனுப்ப, அந்த ஆள், 'ரொம்ப மொந்தமா இருக்கு. செல்லாது செல்லாதுன்னு...'' மறுபடியும் திருப்பி அனுப்பினார். இன்னொரு முறை செய்து அனுப்ப, அப்பவும், 'மொறு மொறுன்னு இல்லை. என. சொல்ல, இப்படியே. நான்கு முறை திரும்ப வந்திருச்சு. செம காண்டுல, 'இப்ப செய்து அனுப்பறேன் பார். எப்படி திருப்பி அனுப்பறேன்னு பார்க்கறேன்...' என, உருளைக்கிழங்கை முடிஞ்ச அளவுக்கு சன்னமா சீவி, எண்ணெயில் பொரித்தார். 'பொரித்தெடுத்த சிப்ஸ் ஒன்றை எடுத்து சாப்பிட, அட்டகாசமா, மொறு மொறுன்னு இருந்தது. மேலே லேசா உப்பு துாவி, வாடிக்கையாளருக்கு அனுப்பினார், செப். சாப்பிட்டு பார்த்த அந்த வாடிக்கையாளர், அதன் மொறு மொறு சுவையில் அசந்து என்ன பேர்?' என கேட்டார்.'அந்த ரெஸ்டாரன்ட் இருந்த ஊர் பெயரான, சரடோகா சிப்ஸ் என்பதிலிருந்து, சிப்ஸ் மட்டும் எடுத்து, பெயராக வைத்து விட்டார். செப். அன்றைக்கு கடுப்புல, அந்த ஆள் செஞ்ச இந்த சிப்ஸ், இன்றைக்கு உலகத்துக்கே சூப்பர், 'சைட் டிஷ்' ஆக அமைந்துள்ளது...' என்றார், நண்பர். 'சிப்ஸ்'க்கு இவ்வளவு பெரிய பின்னணி இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டேன், நான்.ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது:இக்காலத்தில் தனிமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களுடன் பேசி, பழக நட்புகள் தேவை.இது, ஆண்- பெண் என, இரு சாராருக்கும் பொருந்தும்.ஜப்பானில், 20 லட்சம் மக்கள், பல காரணங்களால் தனிமையில் வாடுவதாகவும், அத்தகையவர்கள் அவ்வப்போது, தோழி, தோழரை வாடகைக்கு அழைத்து, தங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதாக, ஆய்வு கூறுகிறது.தனிமையில் வாழும் ஒருவருக்கு, தோழராக இருந்த தன் அனுபவங்களை தொகுத்து, 'ரென்டல் பர்சன் ஹூ டஸ் நத்திங்' என்ற புத்தகம் எழுதியுள்ளார், ஷோஜி மொரிமோட்டோ என்பவர்.அதில், என்னை வாடகைக்கு எடுத்தவர், அன்று, தான் ஒரு பெண் தோழியை சந்திக்க விரும்புவதாகவும், அதற்காக, நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். இதை, எனக்கு, 'நினைவு மெசேஜ் தரணும்...' என குறிப்பிட்டிருந்தார்.மற்றொருவரோ, நாள் முழுவதும் கூட இருக்கணும். ஒதுங்கி வாழ்ந்து வாழ்ந்து போரடித்து விட்டது. நாள் முழுவதும் நிறைய பேச வேண்டும், என்றாராம்.இந்தியாவிலும் இப்போது இதற்கென உள்ள, 'வெப்சைட்'டுகள் பெருத்து விட்டன. இந்த, 'வெப்சைட்'டை பயன்படுத்துவதில், உலக அளவில், நாம், 5வது இடத்தில் உள்ளதாகவும், ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுசார்ந்த, 'வெப்சைட்'டுக்குள் நுழைய வேண்டுமானால், முதலில் சந்தாவாக, 1,500 ரூபாய் கட்ட வேண்டும்.அடுத்து, 'வெப்சைட்' போடும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.*இச்சையற்ற தோழமைக்கு மட்டுமே அனுமதி.* எதிர்பாராத விதமாக வந்த, நபருடன், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.* வரத் தயாராக உள்ள நபர்களின் புகைப்படம் மற்றும் முழு விபரங்கள் தரப்படும். ஆனால், நீங்கள் அழைத்தாலும், அழைத்தவர் வர சம்மதிக்கணும்.* வாடகை விடப்படும் நபருடன் ஊர் சுற்றுதல், மயக்குதல் மற்றும் நெருக்கங்களில் ஈடுபடக் கூடாது.* இவர்கள், 'ஷாப்பிங்' செய்ய உடன் வருவர்.* நீங்கள் விரும்பினால் ஆலோசனை கூறுவர். மட்டும்* இரவு நிகழ்ச்சி ஏதாவது இருந்தால், அதற்கும் உங்கள் சார்பாக செல்ல தயார். இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு, 600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.* தங்கள் பெற்றோரை, டின்னருக்கு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்து, திரும்ப கொண்டு வந்து விட, ஒரு மணி நேரத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம்.இத்தகைய சேவைகளுக்காக, மாணவர்கள், விவாகரத்து பெற்ற பெண்கள் என, பலர் முன் வருகின்றனர்.மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் இதற்கு நல்ல, 'டிமாண்ட்' உள்ளதாம். 'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' போன்ற வலைதளங்களில் இவர்களை எளிதில் கண்டுபிடிக்க இயலும்.உலகம் எங்கோ சென்று விட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !