கவிதைச்சோலை: பொல்லாததும் நல்லதே!
சரியான எதிரி கிடைத்துவிட்டால் அதுவே வெற்றிக்கான அஸ்திரம்! சரியான சூழ்ச்சிக்காரன் அருகிலிருந்தால் அதுவே சூட்சுமம் உணர்த்தும் அஸ்திரம்! சரியான துரோகி உடன் இருந்தால் அதுவே எச்சரிக்கையாய் இருப்பதற்கான அஸ்திரம்! அவமானத்தை அரங்கேற்றுபவர்கள் பின் இருந்தால் அதுவே வெகுமானத்திற்கான அஸ்திரம்! எல்லா கஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம் ஒளிந்திருக்கும்... தீமை இருக்கும் இடமெல்லாம் கண்டிப்பாக நன்மை இருக்கும்! வீழ ஒரு வழி எனில் வாழ நுாறு வழி இருக்கும் - ஆம் பொல்லாததும் நல்லதே! - சு. பிரபாகர், மதுரை. தொடர்புக்கு: 91594 07208