உள்ளூர் செய்திகள்

வெனிஸ், கார்னிவல் திருவிழா!

இத்தாலி நாட்டின், வெனிஸ் நகரில், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி முதல் மார்ச் வரை, 'கார்னிவல்' திருவிழா நடத்தப்படுகிறது. கி.பி., 1168ம் ஆண்டில், வெனிஸ் குடியரசின் வெற்றியைக் கொண்டாடிய போது, இந்த நிகழ்வு துவங்கப்பட்டது.பல வண்ண முகமூடிகளை அணிவது, இந்த விழாவின் தனிச்சிறப்பு. ஐரோப்பாவில் நிலவும், கடுமையான வர்க்க கட்டமைப்புகளுக்கு எதிராகவே, இந்த முகமூடிகள் அணியப்படுகின்றன. 'முகமூடி அணிவது, தன்னை மறைக்க அல்ல, ஏற்றத்தாழ்வுகளை மறைக்கவே...' என்கின்றனர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.இதுமட்டுமல்லாது, ஊர்வலத்தின் போது, வீதி ஓரங்களில் நிற்கும் இளம் பெண்கள் மீது, ரோஸ் நீர் நிரப்பப்பட்ட முட்டைகளைத் துாக்கி எறிவர், முகமூடி அணிந்த இளைஞர்கள். தன் மீது ரோஸ் நீரை அடித்தது யார் என தெரியாமல், பெண்கள் குழம்பி நிற்பது வாடிக்கை.இவை அனைத்தும், ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இதுபோன்ற சுவையான பல நிகழ்வுகள், அங்கு நடைபெறும். -— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !