உள்ளூர் செய்திகள்

செல்ல பிராணியின் மனதை அறிந்துகொள்ள விருப்பமா?

வீட்டில், நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பவர்கள் அதனுடன் மிக அன்யோன்யமாக இருப்பர். பதிலுக்கு அவையும் இருக்கும். ஆனால், சில சமயங்களில் அதன் நடவடிக்கை புரியாது. மனிதர்களை போன்றே அவற்றுக்கும் மனநோய் ஏற்படுவதாக கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.இத்தகைய சூழலில், அதை வளர்ப்பவர்கள் படாதபாடு படுவர். இவர்களுக்கு உதவுவதற்காக, இன்று, வளர்ப்பு பிராணிகளுடன் பேசும், 'மீடியம்கள்' மற்றும் 'கம்யூனிகேட்டர்கள்' வந்து விட்டனர்.இவர்களிடம் பிரச்னையை கூறினால், அவர்கள், செல்ல பிராணிகளிடம், 'மீடியமாக' இருந்து, கேட்டு சொல்வர். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? சாத்தியம் தான் என்று நிரூபித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.கடந்த மாதம், ஒரு பணக்கார வீட்டு வளர்ப்பு நாய், கேன்சரால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் முடிவு காலம் வந்து விட்டதை அறிந்த, அதன் எஜமானன், இந்த நாய் என்ன சொல்ல விரும்புகிறது என அறிந்து கொள்ள, 'மீடியம்' உதவியை நாடினார்.அவரும் நாயுடன் பேச, அது சொன்ன பதில் இதுதான்:நான் வீட்டுக்கு போக விரும்புகிறேன். என் இறுதி கட்டம் வந்து விட்டது. உடனே நாய், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீட்டிற்கு சென்ற ஒரு மணி நேரத்தில் இறந்து விட்டது.இன்னொரு குடும்பத்தினரின் நாயின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கவே, 'கம்யூனிகேட்டரை' தொடர்பு கொண்டு கேட்டனர், வளர்ப்பவர்கள்.அவரும் பேசினார். அந்த நாய், 'இப்ப, வீடு ஒரே குப்பையும் கூளமுமாய் ஆகி விட்டது. முன்பு மாதிரி என் வளர்ப்பு பெற்றோர், எனக்கு வேர்க்கடலை பட்டர் தருவதில்லை. மேலும், ரொம்ப கடினமான பிரஷ்ஷால், என் ரோமங்களை வாரி விடும் சாக்கில் இம்சைபடுத்துகின்றனர்...' என்றதாம்.இதைவிட ருசிகர விஷயம் என்னவென்றால், ஒரு பூனை, வீட்டை விட்டு ஓடி விட்டது. 'டெலிபதி' மூலமாக, 'மீடியமாக' இருந்தவர் தொடர்பு கொண்டபோது, அது பேசவில்லை.பேசவில்லை என்றால், அதற்கு தன் பழைய வீட்டிற்கு போக இஷ்டமில்லை என, அர்த்தமாம்.பெங்களூரில், மீனலட்சுமி என்ற பெண், 45 நாய்களை வளர்க்கிறார். இவற்றில் ஒன்று திடீரென காணாமல் போய் விட்டது. 'மீடியம்' மூலம் முயற்சி செய்தும், அதுபற்றி எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால், ஒருநாள், அந்த நாய், தானே திரும்ப வீட்டிற்கு வந்து விட்டது.இன்று, பெங்களூரு, மும்பை, டில்லி உட்பட பல இடங்களில் வளர்ப்பு பிராணிகளுடன் பேசும், 'கம்யூனிகேட்டர்கள்' உள்ளனர். 90 நிமிட, 'கன்சல்டேஷனு'க்கு, 1,500 முதல், 3,100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்பவர்கள் அதனுடன் பேசி, அதன் உள்ளுணர்வை புரிந்து கொள்வதற்கென்றே, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பு கூட நடத்தப்படுகிறது. இங்கு, எட்டு மணி நேர பயிற்சிக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.இந்த துறையில், ஸ்ரீசைன் ஹர்னீஸ் வாலா, சந்தினி ஜுமானி மற்றும் காஞ்சன் சர்மா என, பலர் பிரபலமாக உள்ளனர். மிருக வைத்திய துறையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டால், 'கம்யூனிகேட்டர்கள்' பற்றிய பல விபரங்கள் கிடைக்கும்.ராஜி ராதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !