ரயில்வே பள்ளியில் 1036 ஆசிரியர் பணியிடங்கள்
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் 734 (துவக்கப்பள்ளி 188, முதுநிலை 187, பயிற்சி பட்டதாரி 338, உடற்கல்வி 18, மியூசிக் 3), தலைமை சட்ட உதவியாளர் 54, மொழி பெயர்ப்பாளர் (ஹிந்தி) 130, அரசு வழக்கறிஞர் 20, நுாலகர் 10, ஆய்வக உதவியாளர் 7 உட்பட மொத்தம் 1036 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்வயது: 18-48 (1.1.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 28.2.2025விவரங்களுக்கு: rrbchennai.gov.in