உள்ளூர் செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 1,102 பணியிடங்கள்

இந்திய வானிலை ஆய்வு மையம் என்பது 1875ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மத்திய அரசின் புவி அறியவில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்கம் குறித்த அறிவிப்புகள் மற்றும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறது. இதன் கீழ் சென்னை, மும்பை உள்ளிட்ட ஆறு மண்டல வானிலை மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 1,102 அறிவியல் உதவியாளர் குரூப் 'பி' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை எஸ்.எஸ்.சி., நடத்துகிறது. வயது தகுதி : 2017 ஆக., 4ம் தேதியின் படி, 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : பி.எஸ்சி., பட்டப்படிப்பில் இயற்பியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐ.டி., / கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ்) இதில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 2017 ஆக., 4.எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 2017 நவ., 20 முதல் 27 வரை. விபரங்களுக்கு : http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/NoticeIMDExamination_2017_18.07.2017.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !