யூனியன் வங்கியில் 1865 அப்ரென்டிஸ் காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் உ.பி., 335, ஆந்திரா 303, மஹாராஷ்டிரா 196, தெலுங்கானா 164, கர்நாடகா 131, ம.பி., 116, தமிழகம் 95 உட்பட மொத்தம் 1865 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 20-28 (1.4.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு. ஊதியம்: ரூ. 15,000 - 20,000. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 236. கடைசிநாள்: 19.5.2026 விவரங்களுக்கு: unionbankofindia.bank.in