2,510 பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் காலியிடங்கள்
தொலைத் தொடர்புத் துறையில் நமது நாட்டின் முன்னோடி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் நாட்டின் மூலை முடுக்குகளிலும் பரந்து கிளைகளைக் கொண்டுள்ளது. டெலிபோன் என்றாலே பி.எஸ்.என்.எல்., தான் என்ற நிலை முன்னர் இருந்தது.அலைபேசிகளின் அசுர வளர்ச்சி இந்த நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைத்தது போல் தோன்றினாலும், தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக தன்னுடைய சேவைகளில் முன்னேற்றங்களைத் தந்து, எளிய மனிதரையும் சென்றடைவதில் இந்த நிறுவனத்தின் பங்கு மகத்தானது. இந்த நிறுவனத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் பிரிவில் (JTO) காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: இதன் மூலம் தமிழகத்தில் 103 இடங்களும், சென்னை தொலைத் தொடர்பு வட்டத்தில் 37 இடங்களும், கேரளாவில் 330 இடங்களும், கர்நாடகாவில் 300 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.வயது: 31.01.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு அல்லது இதற்கு நிகரான தகுதி உடைய படிப்பை டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ், அல்லது எம்.எஸ்சி., சி.எஸ்., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறை: 2017 பிப்ரவரியில் ரூர்க்கி ஐ.ஐ.டி., நடத்திய 'GATE 2017' தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் பதவிக்கு ரூ. 500/-ஐ விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்ச்சி முறை: 'கேட் தேர்வு 2017' அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 ஏப்., 6.விபரங்களுக்கு: www.externalbsnlexam.com