உள்ளூர் செய்திகள்

இஸ்ரோவில் 313 உதவியாளர் பணியிடங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ என சுருக்கமான பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இங்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது, இளைஞர்கள் பலரின் கனவு மற்றும் ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் உதவியாளர் மற்றும் கிளார்க் பதவிகளில் காலியாக 313 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : உதவியாளர் பிரிவில் ஆமதாபாத்தில் 20, பெங்களூருவில் 97, ஐதராபாத்தில் 27, டில்லியில் 4, ஸ்ரீஹரிகோட்டாவில் 35, திருவனந்தபுரத்தில் 89 என 272 பணியிடங்களுக்கும், கிளார்க் பிரிவில் பெங்களூருவில் 2 இடமும், விண்வெளி துறையின் கீழ் உதவியாளர் பிரிவில் ஆமதாபாத் 16, பெங்களூரு 7, ஐதராபாத் 1, டில்லி 14, திருவனந்தபுரம் 1 என 39 பணியிடங்களும் என மொத்தம் 313 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 18 - 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதிலிருந்து ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது. கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதியும் தேவைப்படும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் மூன்று விதமான பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒரே பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இதனை பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அல்லது ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். கடைசி நாள் : 2017 ஆக., 1. விபரங்களுக்கு : http://www.isro.gov.in/sites/default/files/recruitment_notification_for_assistants_and_upper_division_clerks.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !