மத்திய மின்வேதியல் ஆய்வு மையத்தில் 34 காலியிடங்கள்
மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்.,- கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் அமைப்பின் ஒரு அங்கமான சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்பது காரைக்குடியில் உள்ளது. எலக்ட்ரோ கெமிக்கல் பிரிவில் வியக்கத்தக்க ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் : பிட்டரில் 4, டர்னரில் 2, மெஷினிஸ்டில் 2, எலக்ட்ரீசியனில் 6, வயர்மேனில் 4, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கலில் 2, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக்கில் 2, பாசாவில் 5, கார்பென்டரில் 1, ஹார்டிகல்சர் அசிஸ்டன்ட் 2, மற்ற பிரிவுகள் 4 சேர்த்து 34 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 14 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் RDAT என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.07.2017 அன்று காலை 9 மணிக்கு, காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர், மையத்தில் நடத்தப்படும் வாக் - இன் இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்க வேண்டும். அதில் தகுதியான நபர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். விபரங்களுக்கு : http://www.cecri.res.in/Opportunities.aspx